Showing posts with label Nothern. Show all posts

 


🔴  உடைந்து, சிதறிய வட்டுவாகல் பாலம் இரவிரவாக சீரமைக்கப்பட்டுள்ளது, விரைவில் சாதாரண போக்குவரத்துக்கு தயாராகும்!


#srilanka #vaanamlk #UpdateNews #LocalNews

 



வட மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர்   திருஞானம் ஜோன் குயின்ரஸ் ஆலயம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்பு


மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராக வும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராக வும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ்  (வயது-60) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இன்றைய தினம் திங்கட்கிழமை(10) காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது.


சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார் சடலத்தை பார்வையிட்டனர்.


அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி  பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார்.


பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்ததாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் , நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

அவரது பதவி விலகலை, நீதி சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை, அடுத்து , நேற்றைய தினம் புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி, மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு விஜயம் செய்த நிலையில், நீதவானின் சமாதான அறை மற்றும் நீதிமன்றத்தில் நீதவானின் கட்டுப்பாட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் என்பன மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், நீதவான், நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவினால், மல்லாகம் மேலதிக நீதிபதிக்கு எதிரக  நேற்றைய தினம் 23.9.2025 அன்று விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இதனடிப்படையில், மல்லாகம் மேலதிக நீதவான் இராஜினாமாச் செய்ததாகக தெரியவருகின்றது.


 


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து #JIA மருத்துவ விமானசேவை முதல்முறையாக இன்று இடம்பெற்றது.

ஹைதராபாத்திலிருந்து வந்த ஒரு சிறப்பு #MEDEVAC விமானம் #யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இருவரை ஏற்றிச்சென்றது.

 

மன்னாரில், அபிவிருத்தி உத்தியோத்தர்களாக  கடமை புரந்தவர்கள், கடந்த 5 வருடங்களாக ஆசிரியர்   சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் ஆசியர் சேவையில் நிரந்தரமாக இணைத்துக் கொள்வதற்கு  போட்டிப் பரீட்சை நடத்துதற்கு எதிராக, மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது.

 


ஊடகவியலாளர் குமணன் @kumanan93 அவர்கள்  Can't முன்னர் முல்லைத்தீவு  அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சட்டத்தரணியுடன் சென்றுள்ளார்

 


யாழ். நிருபர் பிரதீபன்

0

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு கூறினார்:

 

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியரும் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். பேராசிரியரின் அறிக்கையில், ஸ்கேனர் பயன்படுத்தப்பட்ட பின்னர் குறைந்தது எட்டு வாரங்களுக்கு மேலதிக அகழ்வுப் பணிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இதனடிப்படையில், நான் இரு தடவைகள் அகழ்வு இடத்திற்குச் சென்று மேற்பார்வை செய்தேன். இதனைத் தொடர்ந்து, இன்றைய விசாரணையில் சில முக்கிய விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இந்த அகழ்வு ஒரு மரண விசாரணையின் கீழ் நடைபெறுகிறது. குற்றவியல் நடவடிக்கைகளில் இதற்கென தனியான சட்ட ஏற்பாடுகள் இல்லை. உடல் கண்டெடுக்கப்பட்டால், அது உடனடியாக மரண விசாரணையாக மாற்றப்படுகிறது. மரண விசாரணையின் முதன்மை நோக்கம், கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளப்படுத்துவதாகும். எனவே, அகழ்வுப் பணிகளுடன், உடல்களை அடையாளப்படுத்துவது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.  சட்ட வைத்திய அதிகாரி, இப்பணிகளில் நிபுணத்துவம் இல்லை என்று ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதாக முறைப்பாடு செய்தார். இது தொடர்பாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. இலங்கையில் அகழ்வுப் பணிகளுக்கு நிபுணத்துவம் இருந்தாலும், உடல்களை அடையாளப்படுத்துவதற்கு உரிய நிபுணத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.உதாரணமாக, 1999இல் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூடுகள் முதலில் இந்தியாவின் ஐதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், அங்கு நிபுணத்துவம் இல்லாததால், அவை திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் லாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. தற்போது அவை இலங்கை பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிகிறோம்.  1999இல் மரண தண்டனைக் கைதியான சோமரட்ன ராஜபக்ச, மேல் நீதிமன்றத்தில் அளித்த கூற்றின் அடிப்படையில் செம்மணியில் அகழ்வு நடத்தப்பட்டது. அவர் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போது 15 எலும்புக்கூடுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. தற்போது, 150 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ராஜபக்ச குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ளதால், அவரது கூற்று உண்மையாக இருக்கலாம் என்பது தற்போது நிரூபணமாகிறது. செம்மணி விவகாரம் தொடர்பாக B2899 என்ற வழக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பல இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சிலர் விடுவிக்கப்பட்டு, ஐவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவ்வழக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கை மீண்டும் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு நான் கோரியுள்ளேன். இதனைப் பரிசீலித்து, இரு வழக்குகளும் தொடர்புடையதாக இருப்பின், மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.  1999இல் செம்மணி பகுதியில் பலர் காணாமல் ஆக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து, கலாநிதி தெவநேசன் நேசையா தலைமையில் மூவர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, 2003 ஒக்டோபர் 28இல் 210 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில், அரியாலை, சாவகச்சேரி, நாவற்குழி, யாழ்ப்பாண நகரம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு படைத்தரப்பினர் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள், முகாம்களின் பொறுப்பாளர்களின் பெயர்கள் உள்ளிட்டவை அறிக்கையில் உள்ளன. இவ்வறிக்கையின் பிரதியை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இவ்விடயத்தில் பொறுப்பு வகித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதால், உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளேன். இதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வழமையாக, மரண விசாரணை முடிந்த பின்னரே குற்றப் புலனாய்வு ஆரம்பிக்கப்படும். ஆனால், பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையின் பேரில், இதற்கு இணையாக புலனாய்வு நடத்தப்படுகிறது. இன்று, சட்டத்தரணிகளான மணிவண்ணன், குருபரன் மற்றும் நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் அளிக்க வந்தவர்களை பயமுறுத்தியதாக முறைப்பாடு செய்தோம். இதனையடுத்து, வாக்குமூலங்கள் பகிரங்கமாக, அனைவரும் காணக்கூடிய இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை இவ்விசாரணையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்தேன். மேலும், சான்றுப் பொருட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும்போது, அவை உரிய மேற்பார்வையுடன் கையாளப்பட வேண்டும் எனவும், இதற்கு அனுபவமிக்க ஆய்வகங்கள் தேவை எனவும் வலியுறுத்தினேன்.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் DNA பரிசோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாகவும், தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். ஆனால், இவ்வாறு புதிதாக அமைக்கப்படும் ஆய்வகத்தில் இப்பரிசோதனைகளை மேற்கொள்வது உகந்ததல்ல என நான் குறிப்பிட்டேன். அனுபவமும் நிபுணத்துவமும் உள்ள ஆய்வகங்களே இதற்கு பொருத்தமானவை என வாதிட்டேன்.  எட்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகளைத் தொடர நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 20ஆம் திகதி அகழ்வு இடம் சுத்தப்படுத்தப்பட்டு, 22ஆம் திகதி மீண்டும் பணிகள் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-



 மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று  (09) 7 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் தீவு பகுதியில் 2ஆவது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும்,பொது அமைப்புக்கள் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.

எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது. இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்று வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர்.

குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனபேவ அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அளவில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள்,குறிப்பாக வயோதிபர்கள், சிறுவர்கள், கர்ப்பினித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும்  காற்றாலை கோபுரங்கள் அமைத்ததன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பேசாலை கிராமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வெள்ள நீர் தேங்கிய நிலையில் அவற்றை கடலுக்குள் செலுத்த தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.
மேலும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடு முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் மன்னார் தீவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் குறித்த இரு திட்டங்களையும் நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்.

பின்னர் நகர சுற்றுவட்ட பகுதியில் தமது போராட்டத்தை தொடர்ந்து  முன்னெடுத்து வருகின்றனர்.

 


செம்மணி, கல்லறை தளத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆடைகள் மற்றும் பிற கலைப்பொருட்களை அடையாளம் காணுமாறு 



யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். #இலங்கையின் மனித புதைகுழி விசாரணைகளில் முதன்முதலாக, ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் 5.00 மணி வரை அகழ்வாராய்ச்சி வளாகத்தில் இந்தப் பொருட்கள் பொதுக் காட்சிக்கு வைக்கப்படும்

 


தற்போது இடம்பெறும் ஈரான் இஸ்ரேல் #iranisraelwar மோதல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் யாழில் மக்கள் எரிபொருள் கொள்வனவிற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். 

 


கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்.


 


யாழ் நல்லூர் ஆலயச்சூழலில் புதிதாக அமைக்கப்பட்ட அனுமதி அளிக்கப்படாத அசைவ உணவகத்திற்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டங்களை அடுத்து, உணவகத்தின் பெயர்ப்பலகையை யாழ் மாநகர சபையினர் தற்போது அகற்றியுள்ளனர்.

 


வடக்கு, கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகள் முன்னிலை!

ஆனாலும் பெரும்பான்மை இல்லை! நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழ்த்தேசிய கட்சிகளே முன்னிலை பெற்றுள்ளன. #Tamil #Elections #LKA #WWTnews #WorldwideTamils

 


ஜனாதிபதி அநூரவின் நடவடிக்கை - தமிழ் மக்கள் மகிழ்ச்சியில்

யாழ்ப்பாணம் வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக இன்றைய தினம் (9) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் , மக்கள் வீதியில் தேங்காய் உடைத்து பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்தது.

உள்ள்நாட்டுபோர் முடிவுக்கு வந்து மக்கள் பாவனைக்கு வீதி விடப்படத நிலையில், குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் (9) வீதி கட்டுப்பாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீதியில் தேங்காய் உடைத்து , பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காலை 6 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை!


நடைபயணம் தடை!


வாகனங்களை இடையில் நிறுத்த முடியாது!


புகைப்படம் எடுக்கத் தடை!

போன்ற பல கட்டுப்பாடுகளுடன் பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலய இராணுவ குடியிருப்பு ஊடாக செல்லும் வீதி இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

 


Rep/WWT

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார்விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (28) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. 

 

ஏக்கிய ராஜ்யவை நிராகரிக்கும்,சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டி தீர்வு!

சர்வதேச போர்க்குற்ற விசாரணை! வடக்கு, கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்! யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.