Showing posts with label Akkaraipattu. Show all posts

 


முஸ்லிம் பெண்கள் கடந்த காலத்தில் Nursing இனை தெரிவு செய்யாமைக்கான பிரதான காரணமாக இருந்த Dress code பிரச்சினை இனி இல்லை. 


முஸ்லிம் cabinet ministers ஆல் முஸ்லிம் தேசிய தலைவர்களால் செய்ய முடியாததை மாணவர் சங்கம்  AUMSA மற்றும் புத்தி ஜீவிகள் இணைந்து செய்துள்ளார்கள்.


எமது கலாச்சாரதிற்கு மதிப்பளித்த தேசிய மக்கள் சக்தி அரசங்கத்திற்கு நன்றி.


 நூருல் ஹுதா உமர்


தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் துறையின் ஏற்பாட்டில் புவி தகவல் நுட்பம் (Geo-Informatics) குறுங்கால பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025.10.14 ஆம் திகதி  கலை மற்றும் கலாசார பீடத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன்  உள்ளிட்ட  அதிதிகள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர். இங்கு கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் விஷேட உரை ஒன்றினை நிகழ்த்தினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக் கலாசாரப் பீடத்தின் புவியியல் துறை சார்பாக நடத்திய Geo-Informatics குறுங்கால  பாடநெறி கடந்த 2025 செப்டம்பர் 13 முதல் ஒக்டோபர் 4 வரை ஏழு தொடர்ச்சியான வார இறுதி நாட்களில் தகவல் தொழில்நுட்பத் துறையின் கணினி ஆய்வகத்தில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். பௌசுல் அமீர், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச். முகம்மட் றினோஸ்,  சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்களும் மாணவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

 


வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் காரமுனை பிரதேசத்தில் இராணுவத்தினருக்கு சொந்தமான உழவு இயந்திரத்துடன் ஜீப் வண்டி மோதி விபத்து சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

 



இஸ்ரேலியர்களால் கிழக்கு மாகாணத்திற்கு அச்சுறுத்தல் : பொத்துவில் தவிசாளர் களத்தில் இறங்கி சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும் - எச்.எம்.எம். ஹரீஸ் அறிவிப்பு


நூருல் ஹுதா உமர் / ஊடகப்பிரிவு


சுற்றுலா தேவைக்காக யூதர்கள் அருகம்பைக்கு படை எடுக்கவில்லை. இந்த நாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்கு ஒரு தளமாக அருகம்பையை பாவிக்கப் போகின்றார்கள். பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தளங்கள் இஸ்ரேலியர்களால் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. எங்களது முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் யூத கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கான ஆசை வார்த்தைகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான  துர்ப்பாக்கிய நிலைமைகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக மிக முக்கிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே கடந்து போகும் ஒன்றல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.


அவரின் கல்முனைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பெருந்தலைவர் அஸ்ரப் அவர்கள்  மரணித்து 25 வருடங்கள் ஆகியுள்ள இந்த சூழ்நிலையில் அவர் விட்டுச் சென்ற பணிகள் முழுமையாக நிறைவேறி உள்ளதா என்று நாங்கள் வினவ வேண்டி இருக்கின்றது.


மிக முக்கியமாக அவர் வேண்டி நின்ற வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான தீர்வு, பிராந்திய நிர்வாக பிரச்சனைகளுக்கான தீர்வுகள் போன்றவை இன்னும் தீர்க்கப்படாது இருக்கின்றது. இச்சூழ்நிலையில் மிக முக்கியமான கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இன்று காசாவில் இஸ்ரேல் யூத சக்திகள் அங்கு  முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அங்கு அழிந்துள்ளார்கள். கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலஸ்தீன வரலாற்றை இல்லாமல் ஆக்குவதற்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.


இவ்வாறான ஒரு கொடுமையான மனிதாபிமானம் இல்லாத ஒரு கூட்டம் காசாவில் உள்ள மக்களுக்கு உணவு நீர் போன்றவற்றை இல்லாமல் செய்து பட்டினியில்  மக்களை மரணப்படுக்கையில் வைத்திருக்கின்ற ஒரு கொடூர சக்தி இன்று கிழக்கு பிராந்தியத்தில் நாங்கள் வசிக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இந்த கொடூர சக்திகள் உல்லாசமாக திரிவது  மட்டுமல்லாமல் இன்று  அவர்கள் அங்கு அமைதியாக இருக்கின்ற மக்களை ஆத்திரமூட்டச் செய்கின்ற வகையில் பல நடவடிக்கையில் ஈடுபடுவது  மிகப் பெரிய கவலைக்குரிய விடயமாக மாறி இருக்கின்றது.


நான் மிக நீண்ட காலமாக பொத்துவில் அருகம்பை  பகுதியில் என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி ஆதாரத்துடன் சில விடயங்களை ஆய்வு செய்த பின்பு தான் நான் இப்பொழுது இந்த  கருத்தினை பகிர்ந்து கொள்கின்றேன் .அவர்கள் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் திட்டத்தினை நிறைவேற்றுகின்ற உளவு பிரிவான மொசாட்டினை சேர்ந்தவர்கள். அதேபோன்று இராணுவத்தில் பணியாற்றுகின்ற வீர வீராங்கனைகள் இன்று உல்லாச பயணிகள் போன்று பொத்துவில் பகுதியில் முகாமிட்டு முஸ்லிம் சமுதாயத்தை ஆத்திரமூட்டச் செய்கின்ற கைங்காரியமாக அவர்கள் பொத்துவில் பகுதியில் உள்ள  மபாஷா பள்ளிவாசல் அருகில் அவர்களுடைய சபாத் என்ற  யூத ஆலயத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.


இந்த ஆலயம் ஒரு சட்ட விரோத ஆலயம் .இது சம்பந்தமாக அப்பிரதேச மக்கள் பல தரப்பினரிடம்  முறையிட்டும் இன்னும் உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்கவில்லை .அதற்கு அனுமதி கட்டட அனுமதி ஏனைய உள்ளூராட்சி விதிகளின் படி  அனுமதி வழங்கி இருக்கின்ற பிரதேச சபையும் மௌனமாக இருப்பது பெரும் கண்டனத்துக்குரிய விடயம் ஆகும் .


அவர்களுக்கு உரித்தான சட்டத்தை அமுல்படுத்தி அந்த சபாத் இல்லத்தை மூடுவதற்குரிய எந்த ஒரு பகிரங்க நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதைவிட ஊடகவியலாளர்கள் இந்த விடயம் தொடர்பாக கேள்வி கேட்கின்ற போது பிரதேச சபை நிர்வாகம் அதன் தவிசாளர் மழுப்பலான பதிலை தான் தெரிவித்திருக்கின்றார்.


இது தவிர  என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு இது தொடர்பாக அறிவிக்க நடவடிக்கை எடுக்காது ஒரு பொறுப்பற்ற முறையில் அவர் நடந்திருக்கின்றார். இதன்  காரணமாக அவர்கள் இரண்டாவது சபாத் இல்லம் ரூபாஸ் ஹோட்டல் அருகே ஆரம்பித்திருக்கிறார்கள்.


கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதிய இரண்டாவது சபாத் இல்லத்தில் அவர்களது மத நிகழ்ச்சிகள் நிறைவேறி இருக்கின்றது. இது சம்பந்தமாக பொத்துவில் இளைஞர்கள் தங்களது முகநூலில் கண்டனத்தை தெரிவித்த போது பொலிஸார் மற்றும்  குற்றப் புலனாய்வு  பிரிவினராலும் அந்த இளைஞர்களை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து பாரிய விசாரணைகளை  மேற்கொண்டு அச்சுறுத்திருக்கிறார்கள். திட்டமிட்ட அடிப்படையில் இந்த விடயங்கள் நடைபெற்று ஒன்றாக இருந்த சபாத் இல்லம் இரண்டாக மாறியிருக்கிறது. பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தளங்கள் இஸ்ரேலியர்களால் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் யூத கலாச்சாரத்திற்கு அவர்களை பின்பற்றுவதற்கான ஆசை வார்த்தைகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.


இந்த நாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்கு ஒரு தளமாக அருகம்பையை பாவிக்கப் போகின்றார்கள் என்பது தான் இதில் உள்ள மர்மம். இந்த நாட்டில் பல சுற்றுலாத் தலங்கள் இருந்து கொண்டிருக்கின்றது. ஹிக்கடுவை, பாசிக்குடா, பெந்தோட்டை, நுவரெலியா, கொழும்பு மற்றும் கண்டி   இருக்கின்றது. நிலாவெளி இருக்கின்றது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நிரந்தரமாக ஒரு குடியிருப்பாளர்கள் போன்று நிலங்களை வாங்கி செயற்படுகிறார்கள் என்றால் பூகோள அரசியலில் பெரும் ஒரு சதியாகவே  பார்க்க வேண்டும். தெற்காசியாவில் பெரும் நாடு  இந்தியாவில் கூட இவ்வாறு முகாமிடவில்லை.  பூட்டான் மற்றும் நேபாளத்தில் கூட முகாமிடவில்லை. மாலைதீவில்  கூட இவ்வாறு படையெடுக்கவில்லை .இதில் எமக்கு இருக்கும்  அச்சம் என்னவென்றால் தெற்காசியாவில் முஸ்லிம் பெரும்பான்மையாக பலத்துடன் இருக்கின்ற ஒரே ஒரு மாகாணம்  கிழக்கு மாகாணம்.


இந்த கிழக்கு மாகாண முஸ்லிம்களுடைய அரசியல் பலம் அதே நேரம்  ஏனைய இனங்களுடன் பௌத்த தமிழ் இனங்களுக்கு இடையில் இருக்கின்ற ஒற்றுமையை இல்லாமல் செய்வதற்கான சதி திட்டத்தில் ஒரு அங்கமாக நான் இதைப் பார்க்கின்றேன். இது எதிர்காலத்தில் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கின்றது. இது சம்பந்தமாக அண்மையில் நான் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை தலைவர் ரிப்தி முப்தி மற்றும் சிரேஸ்ட உலமாக்களிடம் நான் பேசியிருந்தேன். அவர்களும் ஒத்துக் கொண்டார்கள். இது தொடர்பில் பல ஆபத்தான செய்திகள் எங்களுக்கு கிடைத்து வருகின்றது என்று என்னிடம்  கூறினார்கள். இது தொடர்பில் பல அரசியல் தலைமைகளுடன் பேசி இருக்கின்றோம். எனவே இந்த கட்டத்தில் எந்தெந்த பதவியில் யார் யார் இருக்கின்றார்களோ அவர்கள் இன்னும் அலட்சியம் இல்லாமல் முதலாவது பொத்துவில் பிரதே சபை தவிசாளர் களத்தில் இறங்கி தனக்குரிய சட்டத்தை அல்லது அதிகாரத்தை கையில் எடுத்து இந்த விடயத்திற்கு ஒரு ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் வர வேண்டும்.


தேசிய ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதே போன்று இதற்கு பொறுப்பான உல்லாச பிரயாணத்துறை அமைச்சர்கள்  தலையிட்டு இந்த விடயத்தில்  உள்ள சதிகளை புலனாய்வு பிரிவினை  பயன்படுத்தி  இதற்கு ஒரு  முடிவு கட்ட வேண்டும். அண்மையில் கூட இலங்கை சட்டத்தை பொருட்படுத்தாமல் இரண்டு இஸ்ரேலியர்கள் இந்த நாட்டின் பிரஜைகளை  தாக்கிய விடயம் அவர்களுடைய ஆணவத்தையும் அவர்களின் அதிகாரப் போக்கினையும் வெளிப்படையாக  காட்டி இருக்கிறது .


இந்த விடயத்தில் நாங்கள் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தான விடயமாக மாறி வரும்;.எனவே இவற்றை தடுக்கின்ற பொறுப்பு பதவியில் இருக்கின்றவர்கள், அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் இதை  மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்த நாட்டில் இப்போதுதான் குறிப்பாக இனங்களுக்கு இடையில் ஒரு  புரிந்துணர்வு ஒரு ஒற்றுமையும்  காணப்படுகின்றது. எனவே இதனை கவனத்தில் எடுத்து அரசாங்க நிர்வாக முறைமை இருந்து கொண்டிருக்கின்றது. நாங்கள் வாழ்கின்ற இந்த பிராந்தியத்தில் ஆபத்தான நிலைமையை வளர விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் இருக்கின்ற என்ற அடிப்படையில் இந்த வேண்டுகோளை விடுகின்றேன் என்றார்.

நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தீர்க்க வேண்டும் என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. 


இந்த உத்தரவு அனைத்து மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள் என அனைவருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அண்மைக் காலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தீர்வுகளை தாமதமின்றி வழங்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 


மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. 


உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிப்பதும் தீர்ப்பதும் அனைத்து நீதிமன்ற ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு பொறுப்பாகும். மேலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறும் எந்தவொரு ஊழியருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. 

(Tamilan)

 

பதிவு: 02 (பிந்திய தகவல்)


Rep/#பர்ஹானா_பதுறுதீன் 

அதிகாலை ஹபரண பிரதேசத்தில் (மின்னேரியவில்) நடந்த பாரிய விபத்து.


கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரிய படுஓய பாலத்திற்கு அருகில் மாதுருஓயா விலிருந்து கொழும்பு நோக்கிப் பயனித்த தனியார் போக்குவரத்துபஸ் ஒன்று எதிர் திசையில் வந்த டிப்பர் வாகணத்தில் மோதி இன்று (12) அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளனதில் 28 பேர் படுகாயமடைந்து பொலன்னறுவ, மின்னேரிய, ஹிங்குறாக்கொட ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெிரிவிக்கின்றன.


කොළඹ - මඩකලපුව ප්‍රධාන මාර්ගයේ මින්නේරිය, බටුඔය පාලම අසලදී මාදුරුඔය  සිට කොළඹ බලා ධාවනය වෙමින් තිබූ බස්රථයක් ඉදිරිපසින් පැමිණි ටිපර් රථයක ගැටීමෙන් අද(12) අලුයම 3.00 ට පමන සිදුවූ අනතුරකින් පුද්ගලයින් 28 දෙනෙකු තුවාල ලබා පොළොන්නරුව, මින්නේරිය සහ හිගුරක්ගොඩ යන රෝහල් වෙත ඇතුලත් කෙරුනා. ඔවුන්ගෙන් කිහිපදෙනෙකුගේ තත්ත්වය බරපතල බවද රෝහල් ආරංචි මාර්ග සදහන් කරනු ලබනවා.


#பர்ஹானா_பதுறுதீன் 

2025/08/12

 



ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அயான் அகாஷ் கௌரவிப்பு


(எச்.எம்.எம்.பர்ஸான்)


தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றி சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வுப் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவன் அயான் அகாஷை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (4) இடம்பெற்றது.


பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவனுக்கு பூ மாலை அணிவித்து மலர் கொத்து வழங்கி பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


தனது திறமையினை வெளிப்படுத்திய மாணவனுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.


ஒலிம்பியாட் போட்டியில் சாதனை படைத்துள்ள மாணவன் அயான் அகாஷ், எம்.எச்.எம்.பாஹிர், எம்.எச்.றிஸானா ஆசிரியை ஆகியோரின் புதல்வராவார்.

 



நூருல் ஹுதா உமர்


இலவச உயர்கல்விக்கான வழிகாட்டல் கருந்தரங்கு செசெக்ஸ் (Sussex Campus) கம்பஸின் ஏற்பாட்டில் நாளையும், நாளை மறுதினமும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு டாக்டர் ஜெமீல் வைத்தியசாலை சாய்ந்தமருது கிளை கேட்போர் கூடத்தில்  (24) இடம்பெற்றது.

யுனி ஸ்மார்ட் யூ.கே (UniSmart UK) மற்றும் Sussex Campus இன் தவிசாளர் கலாநிதி பொறியியலாளர் ஏ.எம்.ஐ. ஸாதிக் இந்த உயர் கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கு தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கையின் கல்வி முறை, பல்கலைக்கழக தெரிவு, தொழிற்சந்தை, வெளிநாட்டு கற்கைகள், வெளிநாட்டு பல்கலைக்கழக தரவரிசை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டிய சீர்திருத்தம், கொள்கைகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் எதிர்வரும் சனிக்கிழமை (26), காலை 10 மணிக்கு கல்முனை அஸாத் பிளாசா மண்டபத்திலும், மாலை 04 மணிக்கு அக்கரைப்பற்று ஹல்லாஜ் மண்டபத்திலும் மறுநாள் 27ம் திகதி ஞாயிறு மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு கிரீன் கார்டன் உணவகத்திலும், மாலை 07 மணிக்கு காத்தான்குடி நாஸ் கம்பஸிலிம் நடைபெற உள்ள இலவச உயர் கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கு தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் இந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரிஹான் சாஹிர், இணைப்பாளர் அஸ்வர் றிஸ்வி, கிழக்கு மாகாண இணைப்பாளர் யஹ்யா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




Rep/JKYathusan

தாண்டியடி பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர்காயம்....!!!


 திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட  தாண்டியடி பொத்துவில் பிரதான வீதியில்  மோட்டாசைக்கிள் மற்றும் வேன்வண்டி  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....!!!



( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு களைகட்டி வருகிறது.

பகல் இரவு பூஜைகளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இன்று (8) ஞாயிற்றுக்கிழமை பகல் பூஜை ஆயிரக்கணக்கான அடியார்களுடன் இறுதி நாள் பச்சை கட்டலுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நாளை திங்கட்கிழமை (9) மடிப்பிச்சை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆலயத்தில் நெல்குற்றி பொங்கலிடுவது வழமையாகும்.

நாளை மறுநாள் (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் திருக்குளிர்த்தி பாடல் இடம்பெறும்.

 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


இலங்கை முஸ்லிங்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (07)சனிக்கிழமை கொண்டாடுகின்றனர். 


இதுஇதற்கமைய கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகல்முனை கடற்கரை வீதி ஹுதா திடலில் இன்று (07) இடம்பெற்றது. 

 பெருநாள் தொழுகையும்,குத்பா பேருரையினையும் மெளலவி ஜே.எம்.சாபித் (ஷரயி,ரியாதி) நிகழ்த்தினார். இதில் பெரும் அளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்

 


Rep/Faslin-KKY.

விபத்தில் 21 வயதுடைய காத்தான்குடி அப்துல்லாஹ் அகாலமரணம் 


மட்டக்களப்பு, ஆரையம்பதி, 5ம் கட்டையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச்சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு. மற்றொருவருக்கு காயம்


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டையில் நேற்றிரவு 10.10 மணியளவில் விபத்துச் சம்பவமொன்று சம்பவித்திருக்கிறது. 


இவ்விபத்தில் புதிய காத்தான்குடி -06, இராசா ஆலிம் வீதி, அல் அமீன் வீதி, (தோணா சந்தி) என்னும் முகவரியைச்சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் (21 வயது) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த இளைஞன் பிரபல சிங்கப்பூர் டெக்ஸ் உரிமையாளரான பிரபல வர்த்தகரான காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அவர்களின் புதல்வராவார்.


இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.


 மட்டக்களப்பு, கல்முனை சாலை வழியே நேற்றிரவு 10.10 மணியளவில் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த வேனும் மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையை அண்மித்த பகுதியால் பயணிக்கும் போதே நேரெதிர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


குறித்த விபத்தில் சிக்கிய வேன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாடசாலை ஒன்றினது மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த வேன் என தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் காத்தான்குடியைச்சேர்ந்த இளைஞர்கள் இருவர் பயணம் செய்துள்ளதுடன், அவர்களில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கடோ கபு

#


Rep/Jahaan

அக்கரைப்பற்று கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இன்று இரவு எட்டு முப்பது அளவில் விபத்து இடம்பெற்றுள்ளது முச்சக்கர வண்டிகள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வடிவில் மோட்டார் சைக்கிளில் மோதியதால் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வந்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார் முச்சக்கர வண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது  

 


கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


மழை நிலைமை:


திருகோணமலையில் இருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


காற்று :


நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


கடல் நிலை:


கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.


பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்


அனுராதபுரம் - அடிக்கடி மழை பெய்யும்


மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்


கொழும்பு - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்


காலி - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்


யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழை பெய்யும்


கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்


நுவரெலியா - அடிக்கடி மழை பெய்யும்


இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்


திருகோணமலை - அடிக்கடி மழை பெய்யும்


மன்னார் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.