நிகழ்நிலை வகுப்பில் பங்கேற்க வசதியில்லாத மாணவி, தற்கொலை

கேரளாவை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், இணைய வகுப்பில் பங்கேற்கும் வசதி இல்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். மாணவியின் தந்தை தினக்கூலி தொழிலாளர். 2018 புள்ளிவிவரத்தின்படி, கேரளாவின் சரிபாதி மக்கள்தொகையினர் இணைய வசதி உள்ளவர்களாக இருக்கின்றனர்.

அதில் பெரும்பாலானோர் பெண்களாக இருக்கின்றனர். அப்படி இருப்பினும், இணைய வசதி எல்லோருக்கும் சமமானதாக இல்லை. தமிழகத்திலும் கல்வியாளர்கள் இதுகுறித்து கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இணைய வகுப்புகளை நேரடியாகவே ஊக்குவிக்கிறது.


Advertisement