ஏறாவூர் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற, கொழும்புக் கணவர்


(படம்;மட்டக்களப்பு மேலதிக கௌரவ நீதிபதி மரண விசாரணை மேற்கொள்ளும் போது)

மனைவியின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் ஜயங்கேணி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய அப்துல் காதர் ஷியாமியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 27 வயதான உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

.

மனைவியின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்த சம்கவம் தொடர்பாக,ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற கௌரவ நீதிபதி ஜீவராணி கருப்பையா மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
Advertisement