அக்கரைப்பற்று, கோளாவில் 2 கிராமத்தில் ஆண் ஓருவரின் சடலம் மீட்பு




 (சுகிர்தகுமார)    


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 2 கிராமத்தில் புலன் வளவொன்றிலிருந்து ஆண் ஓருவரின் சடலம் இன்று(15) மீட்க்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் கோளாவில் 3 இல் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சுந்தரலிங்கம் கமலஹாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று தனது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் இரவு வரை வீடு திரும்பாத நிலையில் அவரது மகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டதுடன் பதில் கிடைக்காத நிலையில் உறவினர்களுடன் இணைந்து அவரை தேடி உள்ளனர்.
இந்நிலையில் கோளாவில் 2 கிராமத்தில் புலன் வளவொன்றில் ஒருவர் கிடப்பதை அவதானித்த அயலவர்கள் கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கி அவர் ஊடாக சம்மந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம் 119 ஊடாக தொடர்பு கொண்டதன் பிரகாரம் அங்கு வந்த அவர்கள் குறித்த நபர் இறந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் மரணம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்