2026 முதல் புதிய கல்விமுறை – பிரதமர்



 


குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது புகழ் அல்லது வாக்குகளுக்கான திட்டம் அல்ல, மாறாக நாட்டில் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு உண்மையான நடவடிக்கை என்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

 


கடந்த காலங்களில் ஆசிரியர்களை நியமிப்பது முறையாக இல்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

 

 


குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல, வீரம்புகெதர, பிதுருவெல்ல, பில்லஸ்ஸ, மாவத்தகம மற்றும் பரகஹதெனிய பிரதேசங்களில் நடைபெற்ற மக்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.