நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு



 



வி.சுகிர்தகுமார்                   


 நிதி அமைச்சின் ஊடாக வழங்கப்படுகின்ற ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த குழாமினருக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (04) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மத்தியஸ்த சபையின் பயிற்றுவிப்பாளர் எம்.ஜ.எம்.ஆசாத் மற்றும் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா மத்தியஸ்த சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள தேசமான்ய ஸ்ரீ மணிவண்ணன் உப தவிசாளர் ஜெ.ஜெய்கணேஸ் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.லாவண்யா
உள்ளி;ட்ட நியமனம் பெற்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மத்தியஸ்த சபையினுடைய கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் உரையாற்றியதுடன் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
இதேநேரம் மத்தியஸ்த சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் தேசிய ரீதியில் வருடத்திற்கு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிணக்குகள் தீர்க்கப்படுவதாகவும் இதனால் அரசாங்கம் சுமார் 2000 ஆயிரம் பில்லியன் ரூபாவினை மீதப்படுத்தி அதனூடாக பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் மத்தியஸ்த சபையின் பயிற்றுவிப்பாளர் எம்.ஜ.எம்.ஆசாத் கூறினார்.
மேலும் நியமனங்கள் யாவும் எவ்வித தடைகளுமின்றி நேர்மையான முறையில் பரீட்சைகள் இடம்பெற்று அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேநேரம் புதிதிதாக நியனம் பெற்றவர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவரும் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டர்.
புதிய தவிசாளர் தனது கன்னி உரையில் மிக வினைத்திறானான பக்கச்சார்பின்றிய சேவையினை மக்களுக்கு வழங்குவோம் என உறுதியளித்தார்.