கண்ணகிகிராமத்தில் 5 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல்



 



வி.சுகிர்தகுமார்     

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வருமானம் குறைந்த வீடற்ற மக்களின் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மீள்குடியேற்ற அமைச்சினால் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கண்ணகிகிராமத்தில் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்;டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக கண்ணகிகிராமத்தில் 5 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் இன்று (22) நடப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு இணைப்பாளரும் பிரதேச நபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் இராஜேந்திரன் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் அரசுக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.