மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதிக்கு மூதூர் நீதிமன்றத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், பொலிஸாரினால் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மூதூர் நீதிமன்றத்தில் சுமார் 4 அரை வருடங்களாக கடமையாற்றிய தஸ்னீம் பௌஸான் நாளை (15) முதல் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவருக்காக இந்தப் பிரியாவிடை நிகழ்வு மூதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment