மத்தியஸ்த சபைகள் -உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்



 


 மத்தியஸ்த சபைகள்  -பொலிஸாருக்கிடையிலான  இடைத்தொடர்புகளை ஆராயும் கலந்துரையாடல் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


முதலில் பங்கேற்பாளர்களின் பதிவுகள் சுய அறிமுகம்    வரவேற்பு உரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய  சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதான  பொலிஸ் பரிசோதகருமான  ஏ.எல்.ஏ. வாஹிட்  நிகழ்வுகளை  நெறிப்படுத்தினார்.மேலும் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி   தலைமையில்    கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பிரதம அதிதியாக இக்கலந்துரையாடலில் கலந்த  கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.


மேலும்  மத்தியஸ்த சபைகளின் செயற்பாட்டை கல்முனை பிராந்தியத்தில்  வலுவடையச் செய்யும் நோக்கில்   மத்தியஸ்த சபைகளின் தேவைப்பாடுகள் குறித்தும் தவிசாளர்களிடம் கேட்டறியப்பட்டன.

இது தவிர அம்பாறை மாவட்டத்துக்கான  மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள்  அதன் மூலம் மேற்கொள்ளப்பட் வெற்றிச் செயற்பாடுகள் தொடர்பிலும்  அது எதிர்நேக்கும் சவால்கள் தொடர்பிலும் கருத்துரைகளும்  அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

அத்துடன் முரண்பாடு  தொடர்பாடல்   கலந்துரையாடல் போன்ற விடயங்கள் மூலம் மத்தியஸ்தம் செய்யும் முறைகள் தொடர்பாக மத்தியஸ்த சபைகள்  -பொலிஸாருக்கிடையிலான உறவுகள்  மத்தியஸ்தம் செய்யும் பிரயோகரீதியான அறிவாற்றல்   மத்தியஸ்தசபை பற்றிய  விழிப்புணர்வு மற்றும் மத்தியஸ்தசபை செயற்பாடுகள்  பிணக்குகளை எவ்வாறு ஆற்றுப்படுத்துதல் குறித்தும் ஆராயப்பட்டன.


இதன்போது அம்பாறை மாவட்டத்திற்காகன காணி மத்தியஸ்த சபை உட்பட கல்முனை  சாய்ந்தமருது  சம்மாந்துறை  காரைதீவு  நாவிதன்வெளி   பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலங்கை  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு  அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபைகள்  ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபைக்கான  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தவிசாளர்கள் உபதவிசாளர்கள்  இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்குறித்த நிகழ்வில்  சம்மாந்துறை காரைதீவு சாய்ந்தமருது பெரிய நீலாவணை சவளக்கடை மத்தியமுகாம் பொறுப்பதிகாரிகள்   மற்றும்  பொலிஸ் பரிசோதகர்கள்  உப பொலிஸ் பரிசோதகர்கள்  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இலங்கை  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு  அமைச்சின்  உள்ள  மத்தியஸ்த சபை மத்தியஸ்தர்கள்   80 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கை  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு  அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு   பொதுமக்களுக்கு வசதிக்காக பல்வேறு தரப்பினரின் ஊடாக பிணக்குகளை ஏற்று  மக்களின் தேவைகளை   சிறப்பாக பூர்த்தி செய்து  வருகின்றமை  சுட்டிக்காட்டத்தக்கது.