நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று 2025.10.08 ம் திகதி இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆசிரியர் தினத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களாலும், பெற்றோர்களாலும் மாலை அணிவித்து பூச்செண்டு வழங்கி சிறந்த முறையில் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது ஆசிரியர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Post a Comment
Post a Comment