ஜம்மு காஷ்மீர் பொலிஸ் நிலையத்தில் வெடித்துச் சிதறிய வெடிப் பொருட்கள் - 7 பேர் உயிரிழப்பு



 


டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 3000 கிலோகிராம் வெடிப்பொருளின் ஒரு தொகுதி பொலிஸ் நிலையத்துக்குள் வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


இவ் வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் குறித்த வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த வேளை திடீரென அவை வெடித்ததால் தடயவியல் குழு, பொலிஸார் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 


இதில் காயமடைந்த 27 பேரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.