மிக நீண்ட காலம் சேவை செய்யும் நிறுவனமான மயோன் குரூப்பிற்கு விருது..!
நூருல் ஹுதா உமர்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40வது ஆண்டு விழா இன்று காலை கொழும்பு அலரி மாளிகையில் பிரம்மாண்டமாக இடம்பெற்றது.
இவ்விழாவில் மிக நீண்ட காலம் சேவை செய்யும் நிறுவனம் மற்றும் அதிக அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் நிறுவனம் என்பன அடிப்படையாகக் கொண்டு மயோன் குரூப் நிறுவனம் விருது பெற்றது.
இந்த சிறப்பு விருதை மயோன் குரூப் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.றிஸ்லி முஸ்தபா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் இந்த விருதினை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் பிரதமர், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.


Post a Comment
Post a Comment