ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் உள்ள நானுஓயா ஹுலங்வங்குவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலையிலிருந்து நுவரெலியா உடப்புசல்லாவையை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் கவிழ்ந்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment