சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு




 நூருல் ஹுதா உமர்


உலகளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இன்று (14) சிறப்பாக நடைபெற்றது.

பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் டாக்டர் எம்.கே. சனூஸ் காரியப்பர் தலைமையில் வைத்தியசாலை நீரிழிவு கட்டுப்பாட்டு பிரிவு மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்று, பொதுமக்களுக்கு நீரிழிவு நோயின் அபாயங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள், “நீரிழிவு நோய் உலகளாவிய சுகாதார சவால்களில் ஒன்றாக உள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்கள், ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி, மற்றும் தற்காலிக மருத்துவ பரிசோதனைகள் மூலம் இதைத் தவிர்க்கலாம்” என்று வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, பங்கேற்பாளர்களுக்கு இலவச இரத்த சர்க்கரை பரிசோதனை, உடல் எடை மற்றும் BMI பரிசோதனை, உணவியல் ஆலோசனை, முதன்மை அடையாள அறிகுறிகள் பற்றிய விளக்கவுரை, மற்றும் நோயாளிகள் எதிர்கொள்ளும் தினசரி சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.

நடத்துவதில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தொடர்ந்தும் முன்னின்று செயல்படுகின்றது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்வு, நீரிழிவு நோய் குறித்த பொதுமக்களின் அறிவை மேம்படுத்தியதோடு, ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்தும் முன்னின்று செயல்படுகின்றது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்வு, நீரிழிவு நோய் குறித்த பொதுமக்களின் அறிவை மேம்படுத்தியதோடு, ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.