பொறியியலாளர் ஏ.கே. அப்துல் ஜப்பார், மேலதிக செயலாளராக கடமையேற்பு





எம்.ஏ. தாஜஹான்
 கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பொறியியல் துறை)  நியமனத்தை பொத்துவிலைச் சேர்ந்த பொறியியலாளர் ஏ.கே. அப்துல் ஜப்பார் இன்று ஏற்றுக் கொண்டார்.

இவர் இலங்கை பொறியியல் சேவைக்கு 1999 இணைந்து கொண்டவர். நீர்ப்பாசன தினணக்களம் (பொத்துவில்) 2002 - 2009 வரை கடமையாற்றியவர்.

நீர்ப்பாசன பொறியியலாளர் (அக்கரைப்பற்று) 2009 - 2012 கடமையாற்றியவர்.

பின்னர், பாரிய நீர்ப்ப்பாசன கழுதல் ஓய திட்டத்தின் திட்டப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளராகவும்,  2018 - 2024 வரை 4.5 வருடங்கள் கடமையாற்றியவர்.

மேலும் மொனராகலை (2024 - 2025) நீர்ப் பாசன திணைக்களத்தின் பணிப்பாளராகவும், உமா ஓயா நீர்ப் பாசன திட்ட பணிப்பாளராகவும் கடமையாற்றிய நிலையில், கல்வியமைச்சில், இன்று இந்நியமனத்தை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நியமனத்தை ஏற்றுக் கொண்ட ஏ.கே. அப்துல் ஜப்பார் பொறியியலாளர் அவர்களை நேரடியாக அமைச்சுக்கு சென்று Dr. சமீம், சம்சுதீன் ( Ex உப தவிசாளர்), ஆசிரியர் பௌசுல்லா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

சமூக செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கி வரும் இவருக்கு இத்தகைய நியமனம் கிடைத்துள்ளமை ஒரு வரப்பிரசாதமாகும்.

எம்.ஏ. தாஜஹான்