🛑 பொது மக்களுக்கு எச்சரிக்கை – பண்டிகைக் கால மின்சார அபாயம்
நத்தார் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைக் காலங்களில் மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
⚠️ முக்கிய காரணங்கள்:
▪️ தரமற்ற அலங்கார மின்விளக்குகள்
▪️ பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் மின் உபகரணங்கள்
▪️ வீடுகளிலேயே கவனக்குறைவான மின்சாரப் பயன்பாடு
🔌 பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:
✔️ SLS தரச் சான்றிதழ் பெற்ற மின் சாதனங்களையே பயன்படுத்துங்கள்
✔️ 13A Type-G (Square Pin) செருகிகள் கொண்ட அலங்கார விளக்குகளையே வாங்குங்கள்
✔️ பயன்படுத்தும் முன் வெட்டுப்பட்ட கம்பிகள், தளர்வான இணைப்புகள், சேதமடைந்த இன்சுலேஷன் உள்ளதா சரிபார்க்கவும்
✔️ Extension cords-இல் அளவுக்கு அதிகமான சாதனங்களை இணைப்பதை தவிர்க்கவும்
✔️ வெளிப்புற அலங்காரங்களுக்கு மழைத் தூறலைத் தாங்கக்கூடிய (Water-resistant) விளக்குகளையே பயன்படுத்தவும்
🌧️ மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக மின்சார அபாயம் அதிகம் என்பதால், அதீத எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment