சிறைக் கைதி ஒருவர் மீது, துப்பாக்கிச் சூடு





நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் இன்று காலை மருத்துவமனைக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

 அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் மருத்துவமனைக்குள் நுழைந்து சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்த போதைப்பொருள் கடத்தல்காரரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.