Showing posts with label Southern. Show all posts

நேற்றிரவு  களுவாஞ்சிக்குடி கல்லாறில் இடம்பெற்ற விபத்தில், சிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் அகால மரணமானார்.

சாய்ந்ததருதைப் பிறப்பிடமாகக் கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தரான இவர், முச்சக்கர வண்டியொன்றில், தமது நிலையப் பொறுப்பதிகாரியுடன் பிரத்தியேக விஜயம் செய்த வேளையில் இரவு 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹீம் நௌபர், 4 பிள்ளைகளின் தந்தையாவார்.

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரமதாச ஹம்பாந்தோட்டையில் இன்று காலை சென்று வாக்களித்தார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்
தென் மாகாணம், காலி
நேரம்: 07.00 - 16.00
உறுப்பினர்கள் : 28 (17 வட்டாரம் + 11 விகிதாசாரம்)
வாக்குச் சாவடிகள்: 47
வாக்காளர்கள்: 53,384
#Elpitiya #LocalGovernmentElection #LKA #SL https://t.co/ADdRXm9YqX

வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு உள்ளன. 

சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வருக்கு 5 ஆண்டுகள் கடுழிய சிறைத் தண்டனை விதித்து, ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதியினால்  நேற்றைய தினம் விதிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு மத்தள விமான நிலையம் பற்றிய கள நிலவரங்கள அறியச் சென்ற ஐ.தே.க உறுப்பினர்களுக்கு, இராஜ் ரவீந்திர பெணாண்டோ என்ற குற்றச் சாட்டப்பட்ட குறித்த மாநகர முதல்வர் தமது கைத்துப்பாக்கியை காட்டி இவர் அச்சுறுத்திய வழக்கின் தீர்ப்பில் இவர் குற்றஞ்சாட்டப்பட்டார். பின்னாட்களில் அது கைத் துப்பாக்கியல்ல, விளைளாட்டுத் துப்பாக்கி என்றும் மறுதலித்து இருந்தார்.

(க.கிஷாந்தன்)
கிரிந்த கடற்பரப்பில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த தந்தை மற்றும் புதல்வியர் இருவர், ஆகியோரின் இறுதி சடங்குகள் 25.06.2019 அன்று மாலை அட்டன் குடாகம பொது மயானத்தில் இடம்பெற்றன.
ஹம்பாந்தோட்டை கிரிந்த - யால கடற்பரப்பில் நீராடச் சென்றபோது, நீரில் இழுத்துச் செல்லப்பட்டு தந்தையும், அவரது இரண்டு பெண் பிள்ளைகளும் பலியாகினர்.
இதேநேரம், தாய் பாதிக்கப்பட்ட நிலையில், தெபரவெவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அட்டன் நகர பகுதியை சேர்ந்த குறித்த குடும்பத்தினர், யால பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், யால கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த அவர்கள், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். இதன்போது, தந்தையும், புதல்வி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தாயும், மற்றுமொரு மகளும் மீட்கப்பட்ட நிலையில் தெபரவெவ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றனர். இந்த நிலையில், சிகிச்சைபெற்றுவந்த மகளும் உயிரிழந்துள்ளார்.
நான்கரை மற்றும் ஆறு வயது பெண் பிள்ளைகளே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

காலியில் தென் மாகாண ஆளுனர் பணிமனையில் 12 தமிழ், 30 முஸ்லிம் பாடசாலைகளுக்கான 94 ஆசிரியர் நியமனங்கள் இன்று (15) காலி, தென் மாகாண ஆளுனர் காரியாலயத்தில் வழங்கப்பட்டன. 
நியமனங்களை ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் அவர்களும் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும் வழங்கி வைத்தனர்.

அடிப்படைவாதம், தீவிரவாதம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு சிலர் நாட்டினுள் அரசியல் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தீவிரவாதத்தை இவ்வாறு உடனடியாக முடிவுக்கு கொண்டுவர முடிந்தது முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் அல்ல என தெரிவித்த அவர் சர்வதேச உதவியினாலேயே இதனை செய்ய முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார். 

“இது சிங்கள, பௌத்த நாடு அல்ல, சிங்கள பௌத்த மக்கள் அதிகமாக வாழும் நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை உண்டு. அனைவரும் இந்த நாட்டின் மக்களே.”

சில அரசியல்வாதிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தினத்தன்று பாய்சோறு சாப்பிட்டதாகவும் மக்களின் பிணங்களுக்கு மேலால நடந்து சென்று தேர்தலில் வெற்றிபெற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை, காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்ளவோ அல்லது அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைப் பார்வையிடவோ தினந்தோறும் தூர இடங்களிலிருந்து வருகை தருபவர்களுக்கு இலவச தங்குமிட வசதிகளும், இலவச உணவு பானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக நல நோக்கில் தினந்தோறும் வழங்கப்படும் இச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு இவ் வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புக்கு 0719992456

பெலியத்த பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவர் கபில அமரகோன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

பல்லத்தர, மொதரவான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு இன்று (20) காலை சென்ற அவருடைய உறவினர் ஒருவரே, குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

காயமடைந்த ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை உறுப்பினர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

யார் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. 

சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"ரத்தரங்´ எனப்படும் கிரிஷாந்த புஷ்பகுமார தென் மாகாண சபை உறுப்பினரும் பதவியில் இருந்தும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். 

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார, பெப்ரவரி 28 ஆம் திகதி அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை அடுத்து கைது செய்யப்பட்டார். 

16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

குறித்த பாலியல் துஷ்பிரயோகம் பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணைப்பிரிவின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

42 வயதுடைய இலேபெரும ஆரச்சிகே சமன் ரோஹன எனும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்கம பிரதேசத்தில் காலி வீதியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் அவ்வீதியிலான போக்குவரத்துக்கு முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். 

ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. 

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். 

கடந்த ஜனவரி 23ம் திகதி குறித்த இரண்டு வர்த்தகர்களும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், இருவரினதும் சடலங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியிருந்தார்.


22 வயதுடைய காலி கடற்படை முகாதைச் சேர்ந்த பெண் அலுவலர்,அயிசா செவ்வந்தி என்பவர் தமது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். 

இவர் கடந்த 06ம் திகதி வீட்டுக்கு ஓய்வு நிமித்தம் வந்தவர் இன்று கடமைக்கு திரும்பு வேண்டிய தினமுமாகும்,இருப்பினும் இன்றைய தினம் கடமைக்கு மீண்டும் சமூகமளிக்கவில்லை.அவரது உறகஸ்மந்திய வீட்டில், கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சக பெண் சிப்பாயினால், தான் அடிக்கடி அவஸ்தைக்கு ஆளாவதாக அவர் ்
அக்கடிதத்தில் தெரிவித்தள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள கிராமிய வங்கி ஒன்றில் இருந்து 4 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (25) மதியம் 2 மணியளவில் முகத்தை மூடியவாறு தலைக்கவசம் அணிந்து கொள்ளைக்காரர் ஒருவர் துப்பாக்கியை காட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. 

குறித்த சந்தேகநபர் வங்கிக்குள் நுழைந்து ஊழியர்களுக்கு துப்பாக்கியை காட்டி பணத்தை கொள்ளையடித்து செல்லும் விதம் வங்கியில் உள்ள சிசிரிவி கெமராக்களில் பதிவாகி இருந்தது. 

இதேவேளை குறித்த சந்தேகநபர் வங்கியில் சேவையாற்றும் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி ஒன்றையும் பரித்துச் சென்றுள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மத்துகம வெலிப்பன்னையில் பாரிய வெள்ளம்.
பள்ளிவாசல், வீடுகள் உட்பட பலதும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
ஒரு சில இடங்களில் நீர் வற்றினாலும் பல இடங்களில் இன்னும் நிலமை மோசமாகவே உள்ளது.
குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட ஏராளமானோர் நேற்றிரவு முதல் உண்பதற்கும் வளியின்றி தவிக்கின்றனர்.
எனவே பள்ளிவாசல்கள் அல்லது பொதுநிறுவனங்கள் ஊடாக உணவுகளை சேகரித்து உடனடியாக அப்பகுதி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்.
உங்கள் உதவிகளை வழங்க தொடர்பு கொள்ளுங்கள்
👇👇
0777254057
0773416880
(வெலிப்பன்ன சகோதரர்கள்)

தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வகையில் வேகக் கட்டுப்பாட்டை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. 

நிலவுகின்ற மோசமான வானிலை காரணமாகவே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் ஹிக்கடுவ பகுதியில் வைத்து லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மருந்து பொருட்கள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் லொறியின் ஓட்டுனர் மற்றும் மற்றுமொரு நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.