தீவிரவாதத்தை ஒழிக்க முடிந்தது முப்படையினரால் அல்ல - சர்வதேச உதவியால்

அடிப்படைவாதம், தீவிரவாதம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு சிலர் நாட்டினுள் அரசியல் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தீவிரவாதத்தை இவ்வாறு உடனடியாக முடிவுக்கு கொண்டுவர முடிந்தது முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் அல்ல என தெரிவித்த அவர் சர்வதேச உதவியினாலேயே இதனை செய்ய முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார். 

“இது சிங்கள, பௌத்த நாடு அல்ல, சிங்கள பௌத்த மக்கள் அதிகமாக வாழும் நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை உண்டு. அனைவரும் இந்த நாட்டின் மக்களே.”

சில அரசியல்வாதிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தினத்தன்று பாய்சோறு சாப்பிட்டதாகவும் மக்களின் பிணங்களுக்கு மேலால நடந்து சென்று தேர்தலில் வெற்றிபெற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement