வஸ்கடுவ பகுதியில் விபத்து 6 பேர் உயிரிழப்பு

வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு உள்ளன. 

சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement