Showing posts with label science. Show all posts


இலங்கைக்கு வரும் பயணிகள் சிக்கா (Zika) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்களா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நாட்டுக்கு அது தொடர்பில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நாட்டுக்குள் வருபவர்களை பரிசோதிக்க உறுதியான கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இலத்தின் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் அவதானிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சிக்கா என்ற வைரஸ் தற்போது வெளிநாடுகளில் பரவி வருகிறது. 1947–ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ‘சிக்கா’ என்ற காட்டில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதால் அதற்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது. 

ஆபிரிக்க, ஆசிய கண்டத்தில் பரவிய இந்த வைரஸ் 2007–ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகில் உள்ள ‘யாப்’ என்ற தீவில் 75 சதவீதம் பேரை தாக்கியது. 

அதனால் தொடர்ந்து 2015–ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் இருந்து வருகிறது. இலத்தீன் அமெரிக்காவில் பிரேசில், பார்படாஸ் உள்ளிட்ட 20 நாடுகளில் ‘சிக்கா’ வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

(க.கிஷாந்தன்)

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை இன்று மேற்கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றில் சாதனைப்படைத்துள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நான்கு மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் மூலம் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக டிக்கோயா கிளங்கன் வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தனக்கு வயிற்று வலி என நீண்ட காலமாக அவதியுற்று வந்த இப்பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் சிகிச்சைக்கென சென்றுள்ளார்.

இவரை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவர்க்கு ஒளி கதிர் வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் இப்பெண்ணின் வயிற்றில் பாரிய கல் ஒன்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு 26.01.2016 அன்று இவர்க்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அறுவை சிகிச்சைக்குட்படுத்திய பெண்ணின் வயிற்றிலிருந்து 8 கிலோ மதிக்கதக்க கல் ஒன்று அறுவை சிகிச்சையின் ஊடாக பெறப்பட்டுள்ளது.

கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சையின் ஊடாக வைத்தியசாலையின் வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறான அறுவை சிகிச்சையின் ஊடாக பாரிய கல் எடுத்திருப்பது வைத்தியசாலைக்கு சாதனையாகும்.

அதேவேளை சிகிச்சைக்குட்படுத்திய பெண் உயிருடன் நலமாக இருப்பதாகவும் சிகிச்சை பாரிய வெற்றியை தந்திருப்பதாகவும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் சி.யூ. குமாரசிரி தெரிவித்தார்.



 சிகா வைரஸைப் பரப்பும் அடெஸ் கொசு(நுளம்பு)
சில தென்னமெரிக்க நாடுகளில் பரவிவரும் ஸிகா வைரஸ், கனடாவையும் சிலியையும் தவிர்த்து மற்ற அமெரிக்க கண்ட நாடுகள் அனைத்திலும் பரவக்கூடும் என்று தாம் எதிர்பார்ப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் துவங்கி பிரசிலில் இக்கிருமி வேகமாகப் பரவிவருகிறது.
அடெஸ் என்கிற கொசுவின் கடியால் பரவும் இது குழந்தைகள் பாதிப்புடன் பிறப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒன்று
இந்த குறிப்பிட்ட அடெஸ் ரக கொசுக்கள் தவிர வேறு வகையிலும் இந்த வைரஸ் பரவுதற்கான சாத்தியம் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதைக் காட்டக்கூடிய நோயின் அறிகுறிகள் மிகவும் மென்மையானவையாக இருப்பதால் இதனை உடனடியாக கண்டறிவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நோய்ப் பரவியுள்ள நாடுகளுக்கு செல்வதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற ஹென்ரி ஒர்ஸ்லி
அண்டார்டிகா பகுதியை யாருடைய உதவியும் இன்றி தனியாக நடந்தே கடக்க முயன்றுகொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த சாகச நடைபயண ஆய்வாளர் ஒருவர் இறந்துவிட்டார்.
அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயற்படாமல் போனதால் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.
இறந்தவரின் பெயர் ஹென்ரி ஓர்ஸ்லி. அவருக்கு வயது 55. இவர் முன்னாள் இராணுவ அதிகாரி.
கடந்த வெள்ளிக்கிழமை தான் மிகவும் களைத்துவிட்டதாகவும் தனது உடலில் தண்ணீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிட்டதாகவும் வானலைகள் மூலம் அவர் உதவி கோரியதைத் தொடர்ந்து மீட்பு விமானத்தின் மூலம் சிலிக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவரது நடைபயணத்தில் 71ஆவது நாளில் அவர் இப்படி மீட்கப்பட்டார். அவரது இறுதி இலக்கை அடைவதற்கு 50 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் அவரால் தொடர்ந்து நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
அவரது இந்த நடைபயண சாகசத்துக்கு போஷகர்களாக இருந்த பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமும் அவரது சகோதரர் இளவரசர் ஹாரியும் தங்களின் நண்பனாகவும் தங்களுக்கு உந்து சக்தியாகவும் இருந்த ஒருவரின் மரணம் தமக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.


சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்

தனியார் வைத்தியசாலைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அமைவான ஆலாசனைகளை மறுசீரமைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிமுறை தொடர்பான பிரதிநிதிகளை அழைத்து அறிவிறுத்தியுள்ளதாக தனியார் வைத்திய சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையின் தலைவர் வைத்தியர் காந்தி ஆரியரத்ன கூறினார்.

சிறுநீரக அறுவை சிகிச்சைகளை முறையான வகையில் முன்னெடுப்பது இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

பெண்கள் தொடர்பில் காணப்படும் நிபந்தனைகளுக்கு மேலதிகமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் பின்னர் அவர்களது எதிர்காலம் தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் உள்ள சட்ட விதிமுறைகளை மறுசீரமைக்கவுள்ளதாகவும் வைத்தியர் காந்தி ஆரியரத்ன கூறினார்.

அத்துடன் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை திட்டமிடப்பட்டு இடம்பெறாவிடின் அது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த நிபந்தனைகளின் அடிப்படையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தனியார் வைத்திய சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையின் தலைவர் வைத்தியர் காந்தி ஆரியரத்ன தெரிவித்தார்.

அத்துடன் தற்போது தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்வதற்கு தற்காலிகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் தொடர்பில் ஆராய்வதற்கு ஐவரடங்கிய புதிய குழுவொன்று சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதிப்பணிப்பாளர் நாயகம் இருவரும், சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவரும், பணிப்பாளர்கள் இருவரும் புதிய குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜெயசுந்தர பண்டார குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலைகள், இந்திய வைத்தியசாலைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் குறித்து விரிவாக ஆராய்ந்து அதன் அறிக்கையை புதிய குழு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மருந்துக்கு கட்டுப்படாத புதிய கிருமிகள் உருவாகிவருகின்றன.
புதிய அண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்காக ஆராய்ச்சி செய்வதற்கும் அவற்றை உருவாக்குவதற்கும் நிதி உதவி வழங்க புதிய வழிகளை அரசாங்கங்கள் கண்டறிய வேண்டும் என உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
தற்போதுள்ள மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போகின்ற வீரியமிக்க புது வகை கிருமிகள் பரவுவதால் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும், அவ்வகை கிருமித்தொற்றுகளைத் தடுக்க உலக நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருந்துக்கு கட்டுப்படாத கிருமித் தொற்றுகளைச் சமாளிப்பது பற்றிய பிரகடனம் ஒன்றில் ஜி எஸ் கே, ஃபைஸர், ஜான்சன் அண்ட் ஜான்சன் உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.
டேவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் இதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளது.

விண்வெளியில் நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்த்து ரசிப்பவர்களுக்கு அடுத்த மாதம் ஒரு அபூர்வ விருந்து காத்திருக்கிறது -- ஆம், ஐந்து கோள்கள் அதிகாலை வானில் வரிசையாக ஒரே நேரத்தில் , சாதாரணமாக, தொலைநோக்கி இல்லாமல் பார்ப்பவர்களுக்குக் கூடத் தெரியும்.
புதன், வெள்ளி,செவ்வாய், சனி மற்றும் குரு ஆகிய கிரகங்கள் ( கோள்கள்) பத்தாண்டுகளுக்கும் மேலான காலத்தில் இது போல வரிசையாக அணிவகுத்து உங்கள் கண்களுக்குப் புலப்படப் போகின்றன.
இந்தக் காட்சி அடுத்த புதன்கிழமையிலிருந்து பிப்ரவரி 20 வரை தெரியும்.
ஆனால் புதன் கிரகம் அந்தக் காலகட்டத்தின் இறுதியில் சற்று மங்கலாகத் தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பொழுது புலர்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன் பார்க்கத் தொடங்குமாறு விண்வெளி ரசிகர்களுக்கு அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்தக் காட்சி, இந்த ஐந்து கோள்களும், அவைகளின் சுற்றுவட்டப் பாதையில் சூரியனின் தோற்றப்பாதை என்றறியப்படும் திசையில் அணிவகுப்பதால் சாத்தியமாகிறது.
நடைமுறையில், இது பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகே இந்தக் கோள்கள் ஒரே வரிசையில் அணிவகுப்பதைத்தான் குறிக்கிறது.
இதே போன்றதொரு அணிவகுப்பு வரும் ஆகஸ்டு 13லிருந்து 19வரை நடக்கும்.
அந்த சமயத்தில் இந்த அணிவகுப்பு அந்தி சாயும் நேரத்தில் நடைபெறும். அப்போது பூமியின் தென்பாதியில் வசிக்கும் மக்கள் இதை நன்றாகப் பார்க்க முடியும்.
கடந்த முறை இதே போன்றதொரு அணிவகுப்பு நடந்தது டிசம்பர் 2004லிருந்து ஜனவரி 2005 வரைதான்.

விண்வெளி ஆராய்ச்சிக்கு தாம் செலவு செய்யும் நிதியில் பெருமளவான குறைப்புகளை ரஷ்யா அறிவித்துள்ளது.
உலக சந்தையில் பெட்ரோலிய எண்ணெய்யின் விலை விழுந்துவருவதால் ரஷ்யாவுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுவர, பலவித சிக்கன நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தயாராகிவரும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ரஷ்யா தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது இரண்டாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டுவரை ஒத்திப்போடப்பட்டுள்ளது.
திரும்பத் திரும்பப் பயன்படுத்தவல்ல ராக்கெட்டுகளை உருவாக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ரஷ்யா தனது புதிய தலைமுறை ராக்கெட்டுகளை ஏவுவதற்காக உருவாக்கிவரும் காஸ்மோடிரோன் மையத்தில் இரண்டுக்கு பதிலாக ஒரு ராக்கெட் ஏவுமேடையே கட்டப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யா தனது ராக்கெட்டுகளை ஏவுவதற்கு கஸக்ஸ்தானில் உள்ள காஸ்மோடிரோனையே வாடகைக்கு பயன்படுத்திவருகிறது.


சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே ஆபத்து அதிகம்.
சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவான ஆபத்து இருப்பதாக நாற்பது லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளிடம் நடத்தப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட சோதனைகளை ஆய்வுசெய்ததில் தெரியவந்துள்ளது.
ஏட்ரியக் குறு நடுக்கம் அல்லது ஆங்கிலத்தில் ஏட்ரியல் ஃபிப்ரில்லேஷன் எனப்படும் இதயத் துடிப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு, உயிராபத்து மிக்க இதய நோய்களும் மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைப்படுகின்ற ஸ்ட்ரோக்-உம் ஏற்பட கிட்டத்தட்ட இரட்டை மடங்கு வாய்ப்பு அதிகம் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.
ஆனால், பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சனை ஆண்களை விட மிகவும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஏட்ரியக் குறு நடுக்கத்தை தடுப்பதற்கான மருந்துகள் அந்தப் பெண்களுக்கு பலனளிக்காமல் போவதும் இன்னொரு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இறந்தே பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை உலக அளவில் கடந்த ஓராண்டில் மட்டும் இருபத்து ஐந்து லட்சத்தைவிட அதிகமாக இருந்துள்ளது என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
அவற்றில் மூன்றில் இரண்டு பங்கிலானவை ஆப்பிரிக்காவில் பிறந்தனவாம்.
தி லான்ஸெட் சஞ்சிகையில் வெளியான ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தே பிறந்த குழந்தைகளின் தொகையில் பாதிக்கும் மேலானவை பிரசவத்தின்போது இறந்தது தான், பயங்கரமான அதிர்ச்சியை தருவதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, அப்படியான இறப்புகளில் பெரும்பாலானவற்றை தடுத்திருக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இறந்தே பிறக்கும் குழந்தைகளின் விகிதம் உலகிலேயே அதிகமாக உள்ள நாடு பாகிஸ்தான். அந்த வரிசையில் அடுத்த ஒன்பது இடங்களிலும் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கிலுள்ள ஆப்ரிக்க நாடுகள்தான் உள்ளன.

லைபீரியாவில் கடந்த ஒரு மாதக் காலப்பகுதியில் இபோலா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை.
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா தொற்று முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் அவசர இடர் மதிப்பீட்டு இயக்குநர் ரிக் பிரேனன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இபோலா தொற்றினால் பாதிப்புக்குள்ளான மூன்று நாடுகளில், லைபீரியா மிக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலான காலப்பகுதியில் இபோலா நோய்த் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை.
சியாரா லியோன் மற்றும் கினி ஆகிய நாடுகள் இபோலா அற்ற நாடுகளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நோய்த் தொற்றினால், மேற்கு ஆப்பிரிக்காவில் முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில், பதினோராயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
எனினும் இந்த நோய் மீண்டும் பரவலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
இபோலாவினால் பாதிக்கப்பட்டு உயிர்தப்பிய பதினேழாயிரத்திற்கும் அதிகமானவர்கள் மருத்துவம் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

ஊழியர்களின் பணியிட இணைய தகவல் தொடர்பாடலை நிறுவனம் கண்காணிப்பது தவறல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பு.

அலுவலக நேரங்களில், தனது தொழிலாளர்கள் அனுப்பும் இணையவழியான கலந்துரையாடல்களையும் செய்திகளையும் அவர்களின் முதலாளிகள் வாசிப்பதற்கும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கும் தடையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வேலை நேரத்தில் தொழிலாளி ஒருவர் யாகூ மெஸஞ்சர் ஊடாக அனுப்பிய தகவலை, அந்த நிறுவனம் வாசித்துப்பார்ப்பது அதன் உரிமையே என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தொழிலாளி நிறுவனத்தின் விதிகளை மீறினார் என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், வழங்கப்பட்ட கடமையை தொழிலாளி முடித்துவிட்டாரா என்பதை உறுதிப்படுத்துவது அவருக்கு வேலை கொடுக்கும் நிறுவன உரிமையாளரின் உரிமையே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நிறுவன உரிமையாளர்கள் எவற்றை, எப்படி கையாள முடியும் என்பது குறித்து தமது தெளிவான கொள்கைகளை வரையரை செய்து தமது ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் மீது தங்குதடைகளின்றி வேவுபார்ப்பதிலிருந்து, தொழிலாளர்களைப் பாதுகாப்பதாக அவை இருக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கவலை

மெஸஞ்சர் ஊடாகத் தான் மேற்கொண்ட தனிப்பட்ட இரகசிய தொடர்பாடல்களை, தனது நிறுவனம் தன் அனுமதியின்றி கைப்பற்றி படித்துப்பார்த்ததுடன், அதன் காரணமாக 2007 ஆம் ஆண்டு தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், ரொமானியாவை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதன் மூலம் அந்த நிறுவனம் தனது தனிப்பட்ட அந்தரங்கத்துக்குள் அத்துமீறித் தலையிட்டு தனது இரகசிய பரிமாற்றங்களை வேவுபார்த்த செயல் தனது அடிப்படை உரிமையை மீறியதாகவும் தெரிவித்திருந்த அவர் தனக்கு து, நீதி கோரியிருந்தார்.

இவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவரை பணி நீக்கம் செய்த அவரது முந்தைய நிறுவனம், தனது முன்னாள் ஊழியர், குறித்த யாகு மெஸஞ்சர் இணைய வழித் தகவல் பரிமாற்று சேவை கணக்கை, தொழில்முறை சார்ந்த விடயங்களுக்காக பயன்படுத்தியிருந்ததுடன், அதிலேயே தனது தனிப்பட்ட பிரத்தியேக தொடர்பாடல்களையும் பேணிவந்துள்ளதாக கூறியிருந்தது. எனவே தாம் அவரது தொழில்சார்ந்த யாஹு மெஸஞ்சர் கணக்கையே கையாண்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட அந்த நிறுவனம் தவறு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
வழக்கு தொடுத்த தொழிலாளியின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ள நீதிபதிகள், ஒரு நிறுவனம் தனது ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள வேலையை சரியாக செய்து முடித்துள்ளாரா என்று பரிசீலித்து பார்ப்பதில், எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரியமாக பயன்படுத்தும் முட்டை பல்புகளின் ஓளிரும் தன்மையை மேலும் மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த வகை பல்புகளில் இருந்து மேலும் ஒளியை பெறும் புதிய ஆய்வில் முன்னேற்றம்
முட்டை பல்புகளில் இரண்டு சதவீதமான சக்தியே ஒளியாக மாற்றப்படுகிறது, இதர சக்தி வெப்பமாக இழக்கப்படுகிறது.
இதன் காரணமாக பல நாடுகளில் இந்த வகையான பல்புகள் புழக்கத்திலிருந்து அகற்றப்படுகின்றன.
ஆனால் அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், விரயமாகும் சக்தியை மீண்டும் ஓளி சக்தியக மாற்றும் வழியை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர்.
தமது கண்டுபிடிப்பை ஜர்ணல் நேச்சர் நானோடெக்னாலஜி எனும் அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இருக்கும் முட்டை பல்புகளில் இருந்து கிடைக்கும் ஒளியைவிட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் மாதிரிகளை தாங்கள் தயாரித்துள்ளதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பாரம்பரியமாக பயன்படுத்தும் முட்டை பல்புகளின் ஓளிரும் தன்மையை மேலும் மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த வகை பல்புகளில் இருந்து மேலும் ஒளியை பெறும் புதிய ஆய்வில் முன்னேற்றம்
முட்டை பல்புகளில் இரண்டு சதவீதமான சக்தியே ஒளியாக மாற்றப்படுகிறது, இதர சக்தி வெப்பமாக இழக்கப்படுகிறது.
இதன் காரணமாக பல நாடுகளில் இந்த வகையான பல்புகள் புழக்கத்திலிருந்து அகற்றப்படுகின்றன.
ஆனால் அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், விரயமாகும் சக்தியை மீண்டும் ஓளி சக்தியக மாற்றும் வழியை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர்.
தமது கண்டுபிடிப்பை ஜர்ணல் நேச்சர் நானோடெக்னாலஜி எனும் அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இருக்கும் முட்டை பல்புகளில் இருந்து கிடைக்கும் ஒளியைவிட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் மாதிரிகளை தாங்கள் தயாரித்துள்ளதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


ரிவர் ப்லைண்ட்னஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒருவகை ஒட்டுண்ணிப் புழுத் தொற்றினால் ஏற்படக்கூடிய குருட்டு நோய்க்கு எதிரான தடுப்புமருந்தை உருவாக்கக்கூடிய மூன்று முக்கிய மூலக்கூறுகளை கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் ஆற்றை அண்டி காணப்படும் இந்த ஒட்டுண்ணிப் புழுக்களால் தொற்றக்கூடிய இந்த நோய் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடியே 70 லட்சம் பேரை பாதிக்கின்றது.
இவர்களில் 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
2020-ம் ஆண்டளவில் பாதுகாப்பு சோதனைகளுக்காக இந்த தடுப்பு மருந்துகளில் ஒன்று தயாராகிவிடும் என்று நம்பப்படுகின்றது.
2025-ம் ஆண்டளவில் அதன் பயன்பாடு பற்றிய சோதனைகளுக்காக இந்த மருந்து தயாராகவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

ஒருவர் வெளியேற்றும் சுவாசக்காற்றை வைத்தே அவருக்கு புற்று மற்றும் நீரிழிவு நோய் தாக்கியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் அரிய முயற்சியில் ஜப்பானிய ஆய்வாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். 

புற்று, நீரிழிவு, ஆஸ்துமா, சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களுக்குள்ளானவர்களின் மூச்சுக்காற்றில் ஒருவித துர்நாற்றம் கலந்திருக்கும். அந்த நாற்றத்தை தரம்பிரிக்கக்கூடிய சக்தி கொண்ட இந்த புதிய மென்பொருள், ஒருவரின் மூச்சுக்காற்றை வைத்தே அவருக்கு புற்று உள்ளிட்ட நோய்கள் உள்ளதா? என்பதை தெளிவாக கண்டுபிடித்துவிடும். 

ஜப்பான் அரசின் கூட்டமைப்புடன் அந்நாட்டின் பிரபல ஆய்வு நிறுவனம் மற்றும் ஒசாகா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் சமீபத்தில் உருவாக்கியுள்ள இந்த மென்பொருள் புற்று மற்றும் நீரிழிவு நோயை கண்டுபிடிக்கும் ஆற்றல் நிறைந்ததாக சோதனை ரீதியாக நிரூபணமாகியுள்ளது.

மேற்கண்ட நோய்கள் உள்ளனவா? என்பதை மிக குறைந்த செலவில் இந்த புதிய கருவியின் மூலம் தெரிந்துகொண்டு அடுத்தகட்டமாக சிறப்பு சிகிச்சைகளை எடுத்துகொள்ள இந்த புதிய கருவி உபயோகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதற்கு தேவையான நோய்சார்ந்த சுவாசக்காற்றின் துர்நாற்ற வகைகளை தரம்பிரித்து பதிவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. கைபேசி போன்றவற்றில் இந்த புதிய மென்பொருளை இணைத்து விட்டால் விலை குறைவான இந்த புதிய கருவி இன்னும் ஆறாண்டுகளுக்குள் வர்த்தக ரீதியாக விற்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட கொரியா ஹைட்ரோஜன் வெடிகுண்டு சோதனையை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அந்நாட்டின் அணு ஆயுத சோதனைத் தளம் ஒன்றுக்கு அருகில் ஐந்து புள்ளி ஒன்று அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு அரச தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
அந்த வெடிகுண்டு ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டு தான் என்பதை நம்புவது சிரமமாக உள்ளதாக தென் கொரியாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் வட கொரியாவில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தை விட இந்த ஹைட்ரஜன் வெடிகுண்டின் சக்தி பலமடங்கு கூடுதலாக இருக்கும் என்று பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
பல தரப்பிலிருந்தும் கண்டங்கள்
வட கொரியாவின் இந்த அணு ஆயுத சோதனை பல தரப்பிலிருந்தும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. இது ஒரு ஆத்திரமூட்டும் செயல் என்றும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறுவதான செயல் என்றும் தென் கொரிய அதிபர் பார்க் குவின் ஹீ தெரிவித்துள்ளார்.
இது ஜப்பானின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ள ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான சீனா இந்த சோதனையை பலமாக எதிர்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, இது ஜப்பானின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் என்றும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனையை உறுதி செய்யமுடியவில்லை என்று தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, எந்த ஒரு ஆத்திரமூட்டும் செயலுக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஏவுகணை சோதனைகள்
கடந்த டிசம்பரில் பியோங்யாங், நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஒரு ஏவுகணை சோதனையை மேற்கொண்டதாக தென் கொரிய ஊடகம் அறிவித்திருந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்ததா தோல்வியில் முடிந்ததா என்று தெளிவாக தெரியவில்லை.
கடந்த நவம்பர் மாதத்தில் வட கொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. கடந்த மே மாதம் நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஒரு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அந்த ஏவுகணை சோதனையின் புகைப்படங்கள் திரிபுபடுத்தப்பட்டிருந்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

எல்நின்யோ காலநிலை சுற்று கடுமையாவதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாகியிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த விநோதமான காலநிலை சில இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அதேநேரம், வேறு சில இடங்களில் பெரும் வறட்சியை ஏற்படுத்தும்.
அதில் ஆப்பிரிக்காவில் சில இடங்களில் பெப்ரவரியிலேயே பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
அடுத்த ஆறு மாதங்களில் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க பிராந்தியங்களும் இதனால் பாதிக்கப்படும்.
இந்த பருவக் காலநிலை, உலக வெப்பத்தை அதிகரித்து காலநிலை மாற்றப் போக்குக்கு இடையூறாக அமையும்.


எபோலா உயிர்கொல்லி நோய் 25 மில்லியன் வருடங்கள் பழமையானது
ஆபிரிக்காவை நிலை குலைய வைத்த எபோலா உயிர்கொல்லி நோயானது 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்ததாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

எச்.ஐ.வி, இன்புளூயன்சா வைரஸ் போன்று இல்லாமல் எபோலா வைரஸ் கண்ணுக்கு தெரியாமல் உள்ளேயே இருந்து உயிரை கொல்லும் கொடிய நோய் என அமெரிக்க இராணுவ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி ஜான் டை தெரிவித்தார். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, வௌவால்கள் இந்த எபோலா வைரஸை பரப்பி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குறிப்பிட்ட 4 வகை ஆபிரிக்க வௌவால்கள் இந்த வைரஸ்களை பெரும்பாலும் பரப்புகின்றன. இந்த ஆராய்ச்சியின் துணை தலைவராக கார்த்திக் சந்திரன் என்ற இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் மரபணு மாதிரிகள் தம்மிடமுள்ளதாக ஜின்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்றச்செயல்கள் தொடர்பில் 2002 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 3900 மரபணு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி பேராசிரியர் ருவன் இலேப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணைகளுக்காக மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஜின்டெக் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

சம்பவ இடங்களில் கண்டெடுக்கப்படும் பல்வேறு உயிரியல் தடயங்கள் ஊடாக அவற்றுக்கு சொந்தமான மரபணுக்களை உருவாக்கி குற்றம் தொடர்பில் கைது செய்யப்படும் சந்தேநபர்களின் மரபணுக்களுடன் ஒப்பிட்டு இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளுதல் இந்த நிறுவனத்தின் கடமையாகும்.

அத்துடன் அது தொடர்பிலான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் பொறுப்பும் ஜின்டெக் நிறுவனத்திற்கு உரித்தானது என்பது குறிப்பிடத்தக்கது.


எவரெஸ்ட் சிகரத்தின் அருகே பனிஏரி ஒன்று உருகி சாதாரண ஏரிகளாக உருவெடுத்துக்கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
Image copyrightSPL
Image captionகும்பு பள்ளத்தாக்கு- பனி ஏரி உருகுகிறது
இந்தப் பகுதியில் பனிக்கட்டிப் பிரதேசங்கள் குறைவதைக் காட்டும் மிகச் சமீபத்திய சமிக்ஞையாக அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள்.
இந்த ஏரிகள் முதலில் சிறு சிறு குளங்களாக உருவாகி பின்னர் ஒன்றாக இணைகின்றன. இதன் மூலம், கும்பு பனிஏரியை உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயலும் மலைஏறிகள் கடப்பது மேலும் கடினமாகும்.
அவை நிரம்பி வழிந்தால், மலையின் அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் பிற கட்டுமானங்கள் பாதிப்புக்குளாகக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் 15 ஆண்டு காலமாக எடுக்கப்பட்ட செய்கோள் படங்கள் மற்றும் மூன்று கள ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பனி ஏரி ஒன்று உருகி வழிந்து நீர்மின்சார நிலையம் ஒன்றை அழித்துவிட்டது.
மற்ற இமாலய பனி ஏரிகளிலும், தண்ணீர் ஏரிகள் உருவாகியிருக்கின்றன. ஆனால் தட்பவெப்ப நிலை அதிகரிப்பதால், கும்பு பனிஏரியில் இந்தப்பிரச்சனை ஏற்படுவதாகத் தெரிவது இதுதான் முதல் முறையாகும்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.