சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே ஆபத்து





சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே ஆபத்து அதிகம்.
சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவான ஆபத்து இருப்பதாக நாற்பது லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளிடம் நடத்தப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட சோதனைகளை ஆய்வுசெய்ததில் தெரியவந்துள்ளது.
ஏட்ரியக் குறு நடுக்கம் அல்லது ஆங்கிலத்தில் ஏட்ரியல் ஃபிப்ரில்லேஷன் எனப்படும் இதயத் துடிப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு, உயிராபத்து மிக்க இதய நோய்களும் மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைப்படுகின்ற ஸ்ட்ரோக்-உம் ஏற்பட கிட்டத்தட்ட இரட்டை மடங்கு வாய்ப்பு அதிகம் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.
ஆனால், பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சனை ஆண்களை விட மிகவும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஏட்ரியக் குறு நடுக்கத்தை தடுப்பதற்கான மருந்துகள் அந்தப் பெண்களுக்கு பலனளிக்காமல் போவதும் இன்னொரு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.