சிரியா அமைதி பேச்சுக்கள் தொடர்பில் இன்னமும் நிச்சயமற்ற சூழல்



சிரியாவுக்கான அமைதி பேச்சுக்களில் எதிரணி குழுக்கள் கலந்துகொள்வார்களா மாட்டார்களா என்ற நிச்சயமற்ற சூழல் இன்னமும் நிலவுகிறது.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள சிரியாவுக்கான அமைதி பேச்சுக்கள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புவரைகூட பேச்சுவார்த்தைகளில் எதிரணி குழுக்கள் கலந்துகொள்வார்களா மாட்டார்களா என்ற நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

அதிபர் அஸ்ஸத்துக்கு எதிரான பல குழுக்கள் பேச்சுக்களுக்காக ஜெனிவாவுக்கு பயணித்துள்ளதாக, மூத்த எதிரணி தலைவர் ஹஸ்ஸத் அப்த் அல் அஸீன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீதான குண்டு தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்ற ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த பேச்சுக்களிலிருந்து விலகி இருக்கப்போவதாக சில எதிர்கட்சி குழுக்கள் முன்னதாக எச்சரித்திருந்தனர்.

இந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிய இடம்தரக்கூடாது என ஐநா தூதர் ஸ்டஃப்பான் தெ மிஸ்துரா சிரிய மக்களுக்கு ஒரு ஒளிப்பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.