மகிந்தவின் மகன் யோஷித்த ராஐபக்ஸ விளக்கமறியலில்



(பின்ணிணைப்பு)
கைது செய்யப்பட்ட முன்னாள் ஐனாதிபதி மஹிந்தவின் மகனான யோஷித்த ராஜபக்ஸ உள்ளிட்ட 13 பேர்  பெப்ரவரி  13 வரை விளக்கமறியலில் வைக்க கடுவல  நீதிமன்ற  நீதவான் தம்மிக்க ஹேமபாலவினால் வைக்கப்பட்டுள்ளார்.நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ, ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட மற்றும் அர்ஜுனா ரணத்துங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட ஐந்து பேர் இன்று விசாரணைகளின் பின்னர் FCID யினால் கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட போதே கடுவெல பிரதான நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஸ விசாரணைக்காக கடற்படை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடற்படை தலைமையகத்தில் யோஷித்த ராஜபக்‌ஸவிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி உறுதி செய்துள்ளார்.