இனவாத ஊடகங்களை உதறித் தள்ளிய பிரதமர்



சில செய்திகளை வௌியிடும் போது, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம மற்றும் எம்பிலிபிடிய சம்பவங்கள் தொடர்பில், ஊடகங்கள் செய்தி வௌியிட்ட விதம் தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


வேட்டைக்குச் சென்று இனவெறியை ஏற்படுத்த வேண்டாம் என இதன்போது சுட்டிக்காட்டிய பிரதமர், சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார். 

இதன்போது தெரண ஊடகம் மற்றும் அதன் ஊழியர்கள் தொடர்பிலும் (சதுர அல்விஸ், மாதவ மடவல) அவர் கருத்து தெரிவித்திருந்தார்.