முன்னாள் பிரதி அமைச்சரின் இணைப்பாளரின் மீது தாக்குதல் சந்தேக நபர்கள் தலைமறைவு. அக்கரைப்பற்றில் சம்பவம்
(எஸ்.ரி.ஜமால்டீன்)
அக்கரைப்பற்று அம்பாரை வீதி 03 ஆம் கட்டை பிரதேசத்தில் இரவு நேரத்தில் வீடொன்றில் புகுந்த சிலர் வீட்டு உரிமையாளரன முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவின் இணைப்பாளரான எம்.ஐ.றினோஸ் என்பவரை ; தாக்கியதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம் பெற்ற மேற்படி தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த வீட்டுரிமையாளர் எம்.ஐ.றினோஸ் என்பவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்; சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகியுள்ள தாகவும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
தாக்குதலுக்குள்ளானவரின் மகனான 15 வயது சிறுவனை கடந்த 24 ஆம் திகதி மாலை வீதியால் சென்று கொண்டிருக்கும் போது சிலர் அழைத்துச் சென்று போதை கலந்த குளிர்பானத்தை அருந்தக் கொடுத்து போதை ஏற்படுத்தி சிறுவனை சட்ட விரோத செயல்களுக்கு தூண்டியுள்ளனர். இச் சம்பவம் பற்றி அறிந்த சிறுவனின் தந்தை சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை அறிந்த சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபர்களில் சிலர் இரவு நேரத்தில் வீட்டுனுள் புகுந்து வீட்டு உரிமையாளரைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு அவரை எச்சரித்தும் சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, பற்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் என கூறுபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.ஸமீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனா
