கடந்ந 2025.11.28 முதல் 12.06 ந் திகதி வரை , தான் பயன்படுத்தி வந்த செல்பேசிகள் மற்றும் (இணைய வசதிகள்) டயலொக் தொலைக்காட்சி போன்றவை செயலிழந்தன. . குறித்த இந்த செயலிழந்த காலப்பகுதியில், தனக்கான கட்டணங்களும் குறிப்பிட்ட டயலொக் நிறுவனத்தினால், அறவீடு செய்யப்பட்டுள்ளாக, சட்டத்தரணி இயாஸ்டீன் தனக்கு ஏற்பட்டிருந்த இழப்புக்களுக்கு எதிராக, கோரிக்கை கடிதம் வரைந்துள்ளார்.
இவற்றினால் தனக்கு ஏற்பட்ட உளவியல் ரீதியிலான பாதிப்புக்கள், வருமான இழப்பு, மற்றும் அசௌகரியங்களும் குறித்த டயலொக் நிறுவனத்தினால் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்தன எ்ன்பதாகவும் குறித்துரைத்துள்ளார்.
தனக்கு ஏற்றபட்ட பாதிப்புக்களுக்குரிய இழப்பீட்டினை வழங்குமாறும், இக் கோரிக்கை கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் டயலாக் நிறுவனம் உரிய பதிலை வழங்காவிடின் கல்முனை நீதிமன்றில் சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் குறித்த கோரிக்கை கடித்தில், சட்டத்தரணி இயாஸ்டீன் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment