தமிழில் தேசிய கீதம் : ஜனாதிபதியை வீழ்த்த இனவாதிகளின் திட்டம்




இன்றைய தினம் கொண்டாடப்பட்ட இலங்கை 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகளின் போது, அரசு ஏற்கனவே தீர்மானித்தான் பிரகாரம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்த கடும்போக்கு பெளத்த அமைப்புக்கள் மற்றும் சில அரசியல் வாதிகள் நேரடியாகவும், இணையத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக பல நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன் ஒரு கட்டமாக சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் இல் ஜனாதிபதியை வீழ்த்துவதற்கான முயற்சிகளை பகிரங்கமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய இம்முறை 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை “Unlike” செய்யுமாறு பிரச்சாரங்கள் முன்னேடுகப்பட்டுள்ளது.
குறித்த பிரசாரங்கள் பகிரங்கமாக மேற்கொள்ள ஆரம்பிக்கப்படும் சமயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை 826,250 பேர் “like” செய்திருந்தனர். இந்த செய்தியை பிரசுரிக்கும் நேரத்தில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பக்கம் 826,002 “like” ஆகக் குறைவடைந்துள்ளது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை 843,138 பேர் “like” செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினருகாக ஜனாதிபதி தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் காரணத்தினாலேயே இந்த இணையத் தாக்குதல்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆட்சியை ஏற்படுத்தியது போன்று அதனை பாதுகாப்பத்திலும் சிறுபான்மையினரின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்