பிரான்ஸ்: பயங்கரவாத குற்றங்களுக்கு குடியுரிமையை பறிக்கும் சட்ட விவாதம் துவக்கம்




பிரான்ஸின் அரசியல்சாசனத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான விவாதத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் துவங்கியுள்ளது.

புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனத்தில், பயங்கரவாத குற்றச் செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட இரட்டை குடியுரிமையுடைவர்களின் பிரெஞ்சுக் குடியுரிமையை நீக்குவதற்கான பரிந்துரையும் வைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆண்டு நம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து, அரசியல்சாசனத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் பலவற்றில் ஒன்றாக இது இருக்கிறது.
புதிய அரசியல் சாசனமானது, ஜிகாதி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் அரசாங்கத்தின் இந்த திட்டமானது சிவில் உரிமைகளை கடுமையாக மீறும் ஒரு செயல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.