ஹிருனிகாவை எச்சரித்த மன்று




பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தில் செயற்பட்ட விதம் குறித்து இன்று கொழும்பு புதுக்கடை நீதிவான்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வழக்கு விசாரணையை திடீரென நிறுத்தி விட்டு, ஹிருனிகாவை நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் அழைத்துள்ளனர்.
பின்னர், இது நீதிமன்றம் என்பதை அவரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர். நீதிமன்றத்துக்குள் நுழையும் போது தலை சாய்த்து மரியாதை செய்தே வருகை தர வேண்டும். இது நீதிமன்ற சம்பிரதாயம் என நீதிபதிகள் அவருக்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன், நீதிமன்றத்துக்கு அகௌரவம் ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டி வரும் எனவும் அவரை நீதிபதிகள் குழு எச்சரித்துள்ளது.
ஹிருனிகாவின் தந்தை பாரத்த பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு விசாரணைக்காக அவர் இன்று நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். இதன்போது அவரது நடத்தை குறித்தே நீதிபதிகள் குழு அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.