
அதிபர் சேவையில் புதிதாக 4076 அதிபர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதிபர் சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில், 4076 பேருடைய பரீட்சைப் பேறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து கல்வி அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்துவதற்கு 15 குழுக்கள் கல்வி அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ளன. அதிகமான குழுக்களை அமைத்திருப்பது, நேர்முகப் பரீட்சையைத் துரிதப்படுத்தி விரைவாக நியமனங்களை வழங்குவதற்கேயாகும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
