கேரளா மாநிலத்திலுள்ள கோவில் திருவிழாவில் தீ, 87 பேர் பலி



கேரளா மாநிலம் கொல்லம் பரவூர் புட்டிங்கள் தேவி  கோவில் திருவிழாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 87 உயிரிழந்தாகவும்,  300 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கோவில் திருவிழா இந்தாண்டும் வழக்கம் போல் நடைபெற்றுள்ளது. திருவிழாவின் போது வாணவேடிக்கையில்  ஏற்பட்ட  தீ விபத்தில் கோயில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கியுள்ளார்.
அதிகாலை 3.30 மணிக்கு இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளது.  இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்