ஜேர்மன் நாட்டு பெண் மீது தாக்குதல்



ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அடித்ததாக தெரிவித்து  அனுராதபுர அபயகிரி நூதனசாலையின் பாதுகாப்பு அதிகாரியொருவர் இன்று சந்தேகத்தின்பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அனுமதி அட்டை இன்றி அனுராதபுர அபயகிரி நூதனசாலையை பார்வையிட குறித்த ஜேர்மன் நாட்டுப் பெண் முற்பட்ட போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியுடன்  கருத்து முரண்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த பெண் நூதனசாலையிலிருந்து பாதுகாப்பு அதிகாரி தன்னைத் தாக்கியதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அனுராதபுர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்