பொலிஸ் கொன்ஸ்டபிள் வெற்றிடங்கள்




பத்தாயிரம் பொலிஸ் கான்ஸ்டபிள் சேவைக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பொலிஸ் சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலளார் ஆரியதாச குரே குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 2500 பேரை சேவையில் அமர்த்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து பாதுகாப்பு செயலாளருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலளார் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.