பாகிஸ்தானில் கடுமையான நில நடுக்கம்



ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கு 6.6 அளவு கொண்ட நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில், பயத்திற்குள்ளான குடியிருப்பாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகக கட்டடங்களிலிருந்து தப்பி வெளியே ஓடியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையுடன் அமைந்துள்ள இந்து குஷ் மலைத் தொடர், இந்த நில நடுக்கத்தின் மையப்புள்ளியாக இருப்பதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது இந்தியத் தலைநகர் தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சிகள் கூறுகின்றன.
எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை