தனிமைப்படுத்தப்பட்ட மேர்வின் சில்வா



தனக்கு எந்தவொரு கட்சியும் மே தினக் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லையென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அழைப்பு இன்றி இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வது தன்னுடைய பழக்கம் அல்ல எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இவரிடம் கூட்டு எதிர்க் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் மே தினங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியதற்கு எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்க விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.