முன்னாள் சபாநாயகர் எம்.எச் முஹம்மத் காலமானார்.




இலங்கைப் பாராளுமன்றின் 14வது சபாநாயகராகப் பணிபுரிந்த எம்.எச் முஹம்மத் இன்று காலை தனது 95ம் வயதில் காலமானார்.

இலங்கையின் முதலாவது முஸ்லீம் மேயர்.

முஸ்லீம் சமய விவகார அமைச்சு உருவாக்கத்தின் மூல கர்த்தா.

மக்கொல முஸ்லீம் அநாதை இல்லத்தின் வளர்ச்சியின் முக்கிய பங்காளி.

மாளிகாவத்தை இஸ்லாமிய நிலைய ஸ்தாபகர் என பல தடங்கள் இவருக்குண்டு

சிரேஸ்ட அரசியல்வாதியான  இவர் 1989-1994ம் ஆண்டுவரை அவர் சபாநாயகராகப் பணிபுரிந்திருப்பினும் அதற்கு முன்பு ஐ.தே.க ஆட்சியில் பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்தவர்.

கொழும்பு மாளிகாவத்தையினைப் பிறப்பிடமானக் கொண்ட இவரது ஜனாசா இன்று மாலை அங்கு நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொண்டு தனது மேலான சுவர்க்கத்தில் சேர்த்து வைப்பானாக.