ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த 33 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக 4.68 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் அளித்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவத்தினால் பூரண அங்கவீனமுற்றஇ பகுதியளவில் அங்கவீனமுற்ற மற்றும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பஹா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 24 பேருக்கும் மஹர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 09 பேருக்கும் எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதியின் கரங்களினால் இவ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.
ரத்துபஸ்வல சம்பவத்தினால் காயமடைந்த பொதுமக்களுக்கு நியாயம் வழங்கும் பொருட்டு கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன்இ அது தொடர்பாக கண்டறிந்து தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக கம்பஹா மாவட்ட செயலாளரின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இவ் இழப்பீடு வழங்கப்படுகிறது.

