மத்திய மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் தனியார் வகுப்புக்கள் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு கிழமைகளில் குறித்த வகுப்புக்கள் நடைபெறுவது முற்றாகத்தடை செய்யப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடாத்தபடும் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்துவதற்கு மாகாண சபையினால் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு அது நிறைவேற்றப்படும் எனவும் மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

