அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆளணியினரை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு ஒன்று இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளன ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீதின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தின் ஆளணி அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றிருந்த ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழகமானது இலங்கையில் உள்ள சில தேசிய பல்கலைக்கழகங்களோடு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஏற்கனவே தொடர்புகளை ஏற்படுத்தி பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயற்பட வாய்ப்பு கிடைத்தமை மிகவும் பயனுறுதி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை அண்டியுள்ள பிரதேசங்கள் அடிக்கடி இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவதால் அதனை முகாமை செய்து கொள்ளுவதற்கு பல்கலைக்கழகம் பாரிய பங்காற்ற வேண்டியுள்ளதால் இந்த வாய்ப்பு அதற்கு பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பல்கலைக்கழகத்தின் எத்துறைசார் விரிவுரையாளர்களும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றபோது அவை தொடர்பில் தெரிவு செய்யப்டுகின்ற ஆய்வுகளுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என சர்வதேச அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிநிதியும் ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழக பேராசிரியருமான டிலான்தி அமரதுங்க தெரிவித்தார்.
இச்சந்திப்பில் சர்வதேச அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளரும் ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழக பேராசிரியருமான ரிச்சட், இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளன தேசிய இணைப்பாளர் ஹேமன்தி குணசேகர உட்பட தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிபதிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

