தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை



ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இதன்பொது நீண்டநேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

எதிரில் நடைபெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் ஒருபோதும் தேர்தலை பிற்போடுவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார்.