மின்சாரத்தை துண்டிக்க சென்ற ஊழியர் மீது தாக்குதல்



மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் காலி, ஹப்புகல பிரதேசத்தில் இன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் சேவைசெய்யும் இந்த ஊழியர், 17,500 ரூபாய் மின்கட்டணத்தை செலுத்தத் தவறிய வீட்டுக்கு, மின்சாரத்தை துண்டிக்கச் சென்றுள்ளார். இதன்போது, ஊழியர் மீது தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் போத்தல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.