(க.கிஷாந்தன்)
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் வீட்டு வளாகத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவரை வட்டவளை பொலிஸார் 28.03.2017 அன்று கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவ்வாறு கஞ்சா செடிகள் வளர்ப்பதை கண்டுள்ளனர். இதன்போது 5 கஞ்சா செடிகள் இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் தனது வீட்டு முற்றத்தில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

