அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரபல நடிகை சபித்தா பெரேராவுக்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்டடத்திற்கு கிட்டத்தட்ட 27 கோடி ரூபா பணம் செலவிட்டு வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் விவசாய அமைச்சினை அங்கு கொண்டு செல்லாமல் பாரிய நட்டத்தை ஏற்படுத்தி குற்றச்சாட்டு தொடர்பில் மோதல் நிலையில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சபித்தா பெரேராவுக்கு பாரிய அளவு பணம் செலுத்தி, குறித்த கட்டடத்தை வாடகைக்கு பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமரே சமர்ப்பித்துள்ளார்.
இதனால் அதன் பொறுப்பினை பிரதமரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர், விசேட பத்திரிகை கலந்துரையாடலில் ஒன்றில் கலந்துக் கொண்டு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ஆரம்பத்தில் அந்த கட்டடத்தை தங்கள் அமைச்சிற்கு கோரியுள்ள போதிலும் பின்னர் சாதாரண வசதிகளை கொண்ட கட்டடம் ஒன்றை வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு ராஜகிரிய கட்டடம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

