தீர்வை வரிவிலக்கு



வெளிநாடு செல்கின்ற பணியாளர்கள் நாட்டிற்கு எடுத்துவரும் தெரிவுசெய்யப்பட்ட சில பொருட்களுக்கு தீர்வை வரியை விலக்களிப்பதற்கு இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.
தொழிலுக்காக சென்று ஒரு வருடத்தின் பின்னர் நாடு திரும்பும் இலங்கைப் பணியாளர்களுக்கு இந்த வரி விலக்களிக்கப்படும் என கட்டுநாயக்க விமான நிலைய பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்ரம பஸ்நாயக்க குறிப்பிட்டார்.
குளியலறை உபகரணங்கள், கணினி, சூரியசக்தி உபகரணங்கள் உட்பட மேலும் சில பொருட்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆடை அணிகலன்களுக்காகவும் வரி நிவாரணமொன்றை வழங்குவதற்கு உத்தேசித்து வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய பிரதி சுங்கப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, குளிரூட்டிகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களுக்கான தீர்வை வரி அறவீடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்ரம பஸ்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.