மாகாண சபைகளின் அதிகாரத்தில் அரசாங்கம் கைபோடவில்லை. அரசியலமைப்பு மாற்றத்துடன் 20வது திருத்தத்தினை அரசாங்கம் கொண்டு வந்திருந்தால், விசேடமாக அமைந்திருக்குமென வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.
20வது திருத்தச் சட்டம் தொடர்பாக தவறான கருத்துக்கள் மக்களிடையே பரப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக சில விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தல்கள் அனைத்தினையும் ஒரே தினத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடாகவே இந்த 20வது திருத்த சட்டமூலம். அந்த சட்டமூலத்தில் கூறப்பட்டள்ளவைகள், அந்த ஏற்பாட்டினை பாராளுமன்றம் தீர்மானிக்கும். தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாண சபைகளின் கடைசிக்காலம் எதுவோ அதுக்கு முதல் ஒரு திகதியை பாராளுமன்றம் தீர்மானிக்கும்.
அவ்வாறு பாராளுமன்றம் தீர்மானிக்கும் பட்சத்தில் அந்த திகதிக்கு முன்னர் கலைக்கப்படும் மாகாணத்தின் முதலமைச்சர், அமைச்சர்கள் அவ்வாறே இருப்பார்கள். அதன் பின்னர் இறுதியாக கலைக்கப்படும் மாகாண சபைகளுக்கான கால முடிவில் தேர்தல் நடாத்தப்படும்.
ஒரு மாகாண சபை எப்போது ஏற்படுத்தப்படுகின்றதோ அதில் இருந்து 5 வருட காலத்திற்கு இருக்க வேண்டும். இது ஒன்று மட்டுமே 13 ஆம் திருத்த சட்டத்தினை தளப்பாது வைக்கும் ஒரு சட்டம்.
20வது திருத்தச் சட்டம் எந்தவகையிலும் மாகாண சபையின் அதிகாரங்களில் கைபோடவில்லை. ஆளுநர் கைபோடப் போகின்றார், பாராளுமன்றம் எடுக்கப் போகின்றது என்பதெல்லாம் பிழையான கருத்துக்கள்.
ஆளுநரிடம் முதலமைச்சர் தாரை வார்த்துக்கொடுத்தால் மாத்திரம் தான் ஆளுநர் அதற்குரிய நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், 20வது திருத்தச் சட்டத்தில் அவ்வாறு ஒரு விடயமும் இல்லை.
மக்கள் கருத்தறியும் குழுவில் மக்களினால் தெரிவிக்கப்பட்ட விடயம் சகல தேர்தல்களும் குறிப்பிட்ட ஓரே தினத்தில் நடாத்த வேண்டுமென்பதே. அரசியலமைப்பு மாற்றத்துடன் அரசாங்கம் இவற்றைக்கொண்டு வருமாக இருந்தால், செழுமைப்படுத்தப்பட்ட விடயமாக இருக்கும்.
புதிய அரசியலமைப்பில் முழுமையாக கொண்டு வந்திருந்தால், 20வது திருத்தம் விசேடமாக அமைந்திருக்கும். அதில் உள்ள விடயத்தினை மட்டும் முன்னுரிமை கொடுத்து கொண்டு வருவதனால் தான் பலராலும் எதிர்க்கப்படுகின்றது என்று அவர் கூறினார்.

Post a Comment
Post a Comment