மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக எஸ்.அருள்குமரன்



(அப்துல்சலாம் யாசீம்)

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக எஸ்.அருள்குமரன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இன்று (24) நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண பணிப்பாளராக  முன்னர் கடமையாற்றிய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தம் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்று சென்றதையடுத்து  சிறப்பு வைத்திய நிபுணராக கடமையாற்றிய  எஸ்.அருள்குமரன் நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தில் வைத்தியத்துறையில் பல சாதனைகளை படைத்த இவர்  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பயிற்றுவிப்பாளராகவும்  சுகாதார துறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்கினார்.


கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சென்று ஊழியர்களின் பிரச்சினைகளையும் ,குறைகளையும் கேட்டறிந்து  உடனுக்குடன் தேவைகளை பூர்த்தி செய்து ஊழியர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 வருடங்களாக சிறப்பு வைத்திய நிபுணராகவும்,மருத்துவ அதிகாரியாகவும் பதவியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.