பித்தளை சந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந்து மதகுரு விடுதலை



2006 ம் ஆண்டு கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிபந்தனையற்ற விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

ஶ்ரீஸ்கந்தராஜா எனப்படும் சர்மா என்ற இந்து மதகுரு ஒருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் பிரதிவாதியான மதகுரு பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதல்ல என்று தெரிய வந்ததையடுத்து அவரை விடுதலை செய்யுமாறு நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார்.