இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் நேற்றைய தினம்,நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கியது.
இந்தோனீசிய நாட்டின் சுலவேசி தீவில் உள்ள பாலு என்ற அந்த நகரம் 6.6 அடி உயர அலைகளின் ஆவேசத்துக்கு இலக்கானது. ஆனால், முன்னதாகவே அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் வலம் வரும் வீடியோ ஒன்றில் சுனாமி அலைகளைப் பார்த்து மக்கள் கத்திக்கொண்டும், அச்சத்திலும் ஓடுவதும், சேதமடையும் கட்டங்களுக்கு மத்தியில் மசூதி ஒன்று இடிந்துவிழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகி, பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தோனேசியாவை இன்று தாக்கிய சுனாமியால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்ததும், அதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் சுமார் 9 ஆயிரம் பேர் பலியானதும் நினைவிருக்கலாம். #Indonesiaarthquake #TsunamiAttack


Post a Comment
Post a Comment